புரதங்கள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளில் ஒன்று பாசிப்பயறு. நம் இந்திய சமையலில் இந்த பருப்பு மிகவும் புகழ் பெற்றது. மற்ற பருப்புகளை ஒப்பிடும் போது பாசிப்பருப்பு உங்களுக்கு அதிகளவு புரோட்டீன்கள் நிறைந்த ஒன்று. வெறும் 100 கிராம் பாசிப்பருப்பில் 3 கிராம் அளவிற்கு புரோட்டீன்கள் காணப்படுகின்றன. எனவே இந்த பாசிப் பருப்பை உங்க அன்றாட உணவில் சேர்த்து வருவது உங்களுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.

நன்மைகள்
- கோலிசிஸ்டோகினின் ஹார்மோனின் செயல்பாட்டை மேம்படுத்த பாசிப் பருப்பு உதவுகிறது. இதை சாப்பிட்ட பிறகு உங்களுக்கு பசிக்காது. வயிறு நிரம்பிய எண்ணத்தை ஏற்படுத்தும். முக்கியமாக உங்க எடையை கட்டுக்குள் வைக்க பாசிப் பருப்பு உதவும்.
- இந்த மஞ்சள் அல்லது பச்சை பருப்பில் பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

- இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தசைப்பிடிப்பில் இருந்து உங்களை காக்கும்.
- ஒழுங்கற்ற இதயத்துடிப்பில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இது எளிதில் சீரணிக்க கூடியது என்பதால் உயர் இரத்த அழுத்தத்தில் உள்ளவர்கள் இதை சாப்பிடுவது நல்லது.
- இந்த பாசிப் பருப்பில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அடங்கி உள்ளன.

- பாசிப்பருப்பு குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது உடலில் உள்ள இன்சுலின், இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது.
- இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, மேலும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

- இவ்வளவு ஆரோக்கியங்களை கொண்ட இந்த பாசிப்பயறை இனி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.