கண்ணிமை துடித்தால் உண்மையில் பணம் கொட்டோ கொட்டோனு கொட்டுமா !! அறிவியல் கூறுவது என்ன !!

விந்தை உலகம்

கண்கள் தானாகதுடிக்கும். அதை அனுபவித்திருக்கிறீர்களா? சிலரால் அதனை உணரமுடியும், சிலரால் அதனை உணரமுடியாது, கண்களை வேகமாக சிமிட்டுவது போலவோ அல்லது கண்ணிமைகள் படபடவென்று அடித்துக்கொள்வது போலவோ தோன்றிடும். சிலர் கண்கள் இப்படி துடிப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும், பணம் வரப்போகிறது என்றெல்லாம் சொல்வார்கள். கண்கள் உண்மையில் துடிக்குமா? அப்படி துடிப்பதற்கு என்னகாரணம் என்ன என்பதுபற்றி இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

மயோகிமியா : கண்கள் அ டி க் கடி து டிப்பதை மயோகிமியா என்று அழைப்பார்கள். கண்களின் கீழ் பகுதியோ அல்லது கண்களின் இமைப்பகுதியோ து டிக்கும். எதற்காக என்று குறிப்பிட்ட காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். இது எப்போதாவது நீடிக்கும் அல்லது சிலருக்கு தோன்றி மறைந்து விடும். இது வாரக்கணக்கில் அல்லது மாதக்கணிக்கில் நீடிக்கக்கூடாது. மற்றபடி எப்போதாவது இப்படியான பிரச்சினை எழுந்தால் கவலை கொள்ளத்தேவையில்லை. பெரும்பாலும் உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றத்தினாலேயே இந்தப் பிரச்சினை எழுந்திருக்கக்கூடும்

 

கண்களுக்கு வறட்சி : பலரும் கண்கள் வறண்டு எரிச்சலடைவதை சந்தித்திருப்பார்கள். குறிப்பாக இந்தப் பிரச்சினை ஐம்பது வயது மேலானவர்களுக்கு வரக்கூடும். கேட்ஜெட்ஸ் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த கண்களில் வறட்சி ஏற்படுவது சகஜம். இதன் அறிகுறிகளாக கண்கள் வறண்டு காணப்படும், அதீத எ ரி ச் சல் உண்டாகும். கண்களை அடிக்கடி கசக்க வேண்டும் போன்ற உணர்வு மேலோங்கும். மருத்துவரிடம் சென்றால் அவர் இந்த வறட்சியைப் போக்க ஐ டிராப்ஸ் கொடுப்பார்.

 

கேஃபைன் : ஒரு நாளைக்கு இரண்டு கப்புக்கும் மேல் காபி டீ குடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கும் கண்கள் துடிக்கும். உடலில் அதிகப்பட்சமாக சேருகிற கேஃபைன் கண்களை துடிக்கச் செய்திடும். கேஃபைன் எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொண்டால் கண்கள் து டி ப் ப தும் குறைந்திடும்

 

ஸ்ட்ரைன் : கண்களுக்கு அதிக வேலைத் தருவது. கேட்க சிரிப்பாக இருந்தாலும், இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். சிலர் கண்ணாடி அணிய வேண்டியிருக்கும், ஆனால் அவர்கள் அதனை அணியாமல் தவிர்ப்பார்கள், குறைந்த வெளிச்சத்தில் டிவி பார்ப்பது, அதிக நேரம் ஒரே மாதிரியாக உட்கார்ந்து படிப்பது ஆகியவை கண்களுக்கு அதிக ஸ்டரஸ் கொடுக்கும்.

 

ஸ்ட்ரஸ் : கண் துடிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஸ்ட்ரஸ் தான். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது ஏராளமான உள்ளுறுப்புகளில் மாற்றங்கள் உண்டாகிறது. அவற்றில் ஒன்றாக அல்லது அதன் அறிகுறியாக கண்கள் துடிக்கிறது.

 

தூ க் க ம் : போதுமான அளவு நீங்கள் தூ ங் க வி ல்லை என்றால் கூட இப்படியான பிரச்சனைகள் எழலாம். தொடர்ந்து உங்களுக்கு போதுமான அளவு தூ க் க ம் கிடைக்கவில்லை என்றால், அதன் வெளிப்பாடாக கண்கள் இப்படித் து டிக்கும்.


இதனால் தான் உண்மையில் கண்கள் து டிக்கின்றன. ஆனால் இதனால் பணம் வரும் என்பது எல்லாம் ஒரு கட்டுக்கதையே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *