பணவரவு அதிகரிக்கும் இந்த ராசியினருக்கு புத்தாண்டு பலன்கள் 2021 எப்படி இருக்கும் தெரியுமா !! முழு பலன்கள் உள்ளே !!

ஆன்மீகம்

குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி ஒன்றிணைந்த 2021 ஆம் ஆண்டு மிதுன எப்படி இருக்கப்போகின்றது என்ற ராசிப்பலனை பார்ப்போம்.2021 ஆம் தன்னம்பிக்கையும், பெரிய பெரிய லட்சியங்களையும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 8க்கு 9க்கு உடையவர் சனி பகவான். 9 ம் இடத்திற்கு 7ம் இடம் என்று சொல்லக்கூடிய களத்திர ஸ்தானத்தில் இருந்து 8ம் இடத்திற்கு சென்று இருக்கின்றார்.7ம் இடம் என்பது களத்திர ஸ்தானம் ஆகும். அவரால் திருமணம் தடைப்பட்டு வந்த மிதுன ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் கடுமையான முயற்சிகளும் இதற்கு உண்டான வரன் தேடுதலையும் செய்து கொள்ளும் பொழுது உறுதியாக நிச்சியமாக இந்த 2021 திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.7ம் இடம் என்று சொல்லக்கூடிய களத்திர ஸ்தானத்தில் இருந்து 8ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அதாவது சனிபகவான் அஷ்டம சனியாக வருகின்றார். அவருடைய சொந்த வீட்டிற்கு சென்றிருப்பதானால் அவ்வளவு கெடுதலான பலன் வராது.

 

தொழில் – இந்த இரண்டாரை ஆண்டுகளில் நீங்கள் தொழில் ஆரம்பித்தால் இடைஞ்சல் பல வரும். ஆனால் அதை தாண்டி வந்துவிட்டால் முன்னோற்றம் கிடைக்கும். இவர் 8ம், 9 ம் க்கு அதிபதியே சனிபகவான் தான். அவர் இந்த இடத்தில் வருவதனால் யோகத்தை தருவார்.பூர்விக வழியில் சொத்து கிடைக்கும் வாய்ப்பு உண்டு.மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டி வருமோ, கணவன், மனைவிக்கிடையே அன்பு குறைந்து விடுமோ, வீண் விவாதகங்களும் சண்டைகள் வருமோ, தொழில், பங்குதாரர்களின் தொல்லைகள் அதிகரிக்குமோ என்ற வீண்கவலை இனி தேவையில்லை.

 

8க்கு குறியவர் 8ம் இடத்திற்கு வருவது சுப பலனே.10ம் இடத்திற்கு லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய மின ராசிக்கு 11ம் இடமான மகர ராசிக்கு வருவதனால் பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்கும்.10ற்கு லாப ஸ்தானத்திற்கு சனிபகவான் சஞ்சரிப்பதனால் தொழில் வீட்டையும் தனது 7ம் பார்வையாக 3ம் பார்வையாக தொழில் வீட்டையும், 7ம் பார்வையாக தனது இரண்டாம் வீட்டையும் , தனது 10ம் பார்வையாக ராசிக்கு 5ம் வீட்டை பார்ப்பதனால் நல்ல பலன்களை தான் தருவார்.அந்தவகையில் அஷ்டம சனியின் கெடுபலன்கள் நிறைய குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்க செய்யும்.

 

வாழ்க்கை – 8ம் இடம் வாழ்க்கையின் போராட்டம். துணிவுடன் அறைகூவல் விடுக்கின்ற 8 வெற்றிகளை காணக்கூடிய இடமாக 8ம் இடம் உள்ளது.நமது எண்ணங்கள் எதிர்பார்ப்பால் அவற்றால் விளையும் நற்பலன்கள் அல்லது தீயப்பலன்களை குறைத்து வருகின்றா என்பதை சுய ஜாதகத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.பொதுவாக பார்க்கும் போது மிதுன ராசிக்கு இம்முறை ஏற்படுகின்ற அஷ்டமத்து சனி தொழில் சிரமத்தை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.இனி வரக்கூடிய காலங்களில் லாபங்கள் குறைவாக இருந்தாலும் நஷ்டங்கள் பெரியளவிற்கு ஏற்படாது.

 

நன்கு திட்டமிட்டு செயலாற்றி வெற்றிகளை சந்திப்பீர்கள். அறிவு வளரச்சி பெருகி மக்களுக்கு சமுதாயத்திற்கு தன்னலமற்ற செய்வதற்கான சேவைகளை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றியை தரும். சனிபகவான் சொந்ந வீட்டில் இருப்பதனால் நீங்கள் செய்யும் எண்ணங்களால் , செயல்களால் உயர்ந்து நிற்பது மட்டுமின்றி பெருமையையும் அடைய கூடிய வகையில் இருக்கும்.

 

வியாபாரம்
வியாபாரத்தில் நல்ல லாபத்தை தரும். குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும். இந்தாண்டு உங்களது சுமை குறையும். தொடர் உளைச்சல் அதிகமாக இருந்தாலும் தொடர் உழைப்பின் காரணமாக லாபத்தை அதிகரிக்க செய்யும். பண வரவு அதிகரிக்கும்.முதலீட்டாளர்களால் லாபம் கிடைக்கும்.மிதுன ராசிக்கு தொழில் வாய்ப்பை சிறப்பை தரும். தந்தையின் தொழில் வாய்ப்பு உயரும். அவரது தொழில் வியாபாரம் நன்கு சிறப்படையும், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.

 

தந்தை வழி குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வேலை செய்தால் மட்டுமே சாப்பிடகூடிய நிலைமை ஏற்படும். கடினமாக உழைக்க வேண்டும்.குருபகவானால் லாபம் குறைவாக தான் இருக்கும். 2021 ஆம் நவம்பர் மாதம் 9ம் இடத்தில் இருந்த குருபகவான் 10ம் இடத்திற்கு அதிசாரமாக செல்வார். 2022 மீன ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார். இதனால் குருபகவான்நல்லதும் கெட்டது மாறி மாறி வழங்குவார்

 

பணத்தை சேமிப்பது சிறந்தது. பென், பொருள்,சேர்க்கை, மகிழ்ச்சி வெளிநாட்டு வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம் போன்ற கனவுகளை 2021 பூர்த்தி செய்யும். பிடிவாத குணத்தை விடுவது நல்லது. கடுமையாக உழைக்க வேண்டும்.இந்தாண்டு புகையிலையை உபயோகிக்க கூடாது. மது பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. நுரையிரல் பாதிப்பு ஏற்படாலம். எனவே கவனமாக இருக்க வேண்டும். அசைவ உணவுகளை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 

பரிகாரம் – இந்தாண்டு பெருமாள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இது நல்ல மாற்றத்தை தரும். மேலும் கால பைரவர் வழிப்படுவதும் நல்ல முன்னேற்றத்தை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *