எதிலும் வேகத்துடன் செயல்படும் இந்த ராசியினருக்கு புத்தாண்டு பலன்கள் 2021 எபப்டி இருக்கும் தெரியுமா !!

ஆன்மீகம்

சினமும், குணமும் ஒன்றாய் கூடிய ஆவேசத்துடன் எதிலும் வேகத்துடன் செயல்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 2021-ஆம் ஆண்டு பாக்கியஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9-வது இடத்தில், காரியஸ்தானம் என்று சொல்லக்கூடிய 10-வது இடத்தில் சனி பகவான், குரு பகவான் சேர்ந்திருக்கிறார். ஒன்பதிற்குரியவர் மற்றும் பத்திற்குரியவர் உங்கள் ராசிக்கு தர்ம கர்மாதிபதி ஸ்தானத்தில் இருக்கிறார்கள். இந்த சனி பெயர்ச்சி மிக சிறப்பாக இருக்காது என்றாலும் மிக மோசமாகவும் இருக்காது என்றே சொல்லலாம். மத்திய பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு ராஜஸ்தானம் என்று சொல்லக்கூடிய 10-ஆம் இடத்தில் ஆட்சி வீடாக சனி பகவான் இருக்கிறார். ஆகவே 10-ம் வீடு உபஸ்தானமாகும். 10-ம் வீடு வளர்ச்சிகளை தரக்கூடியது. வாழ்வின் வளம் வெற்றிக்கான இடமாக இருக்கும். 10-ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பது வியாபாரம், புகழ், அரசு வழி கெளரவம், பொதுசேவை போன்றவற்றை குறிப்பதாகும். குரு சனி சேர்க்கை ஒரு அற்புதமான பலனை தரும்.

 

மேஷ ராசி அன்பர்கள் சுய தொழில் செய்பவர்கள், குடிசை தொழில் செய்பவர்களுக்கு அற்புத பலனை தரக்கூடிய ஆண்டாக இருக்கும். 10-ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி உங்கள் ராசிக்கு 4, 7, 3 மற்றும் 12 ஆம் வீடுகளை பார்க்கிறது. அதிர்ஷ்டத்தின் சின்னமாக இந்த ஆண்டு உங்களுக்கு இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. சனி 10-ல் உலாவும்போது அவ்வமைப்பு 12-ம் வீட்டிற்கு மூன்றாம் பார்வையாக பார்க்கப்படுவதால் சுப பலன் ஏற்படும். இந்நேரத்தில் தாம்பத்திய சுகம் அதிகமாவதற்கான வாய்ப்பு உண்டு.

 

கணவன் மனைவி பிரிந்திருந்தால் இந்த காலகட்டத்தில் இருவரும் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உண்டு. தியானம், ஆன்மீகம் ஆகியவற்றில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்க வாய்ப்புண்டு. விலை உயர்ந்த ஆபரண பொருட்கள் வாங்குவதற்கான காலமாகவும் இந்த ஆண்டு இருக்கும். நீண்ட நாட்களாக இருக்கும் கடன்களை நீங்கள் அடைத்துவிடுவீர்கள். நீண்ட தூர பயணங்கள், வெளிநாட்டு பயணம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழும். 12-ஆம் வீட்டை அயன சயன போஜனம் என்று சொல்லக்கூடிய இந்த அயனஸ்தானம், போஜஸ்தானம் எனக்கூடிய பன்னிரெண்டாம் வீட்டை நோக்கக்கூடிய சனி பகவான் இந்த சமயத்தில் மேஷ ராசி நேயர்கள் கடுமையான முயற்சி எடுக்கும் பட்சத்தில் சொந்தவீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு.

 

4 மற்றும் 11-ஆம் வீடுகளுக்கு சனியின் பார்வை 10-ஆம் வீட்டிற்கும் தொடர்பு ஏற்படுவதால் நிலம் மற்றும் நீண்ட நாட்களாக விற்க நினைக்கும் பழைய வீட்டை விற்க சனி பகவான் உறுதுணையாக இருப்பார்.நீங்கள் செய்யும் தொழிலில் லாபம் அதிகமாக இருக்கும். வரவிற்கு மிஞ்சிய செலவு ஏற்படுகிறது என வருந்தும் மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு தொழிலில் அற்புதமான பலன் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.சமயப்பற்று,இறைபக்தி அதிகரிக்கும். ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியான குரு 10-ஆம் இடத்தில் நீசகதியாக இருந்து சனியினுடைய ஆட்சி பலத்தால் அது நீசபங்கமாகிறது.

 

நீசபங்கம் பெற்ற குரு பகவான் தொழில் மீது அக்கறை, பக்தி, மதிப்பை கொடுப்பார். ஆகவே இந்த காலகட்டத்தில் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.தாய் வழி சொத்துக்கள் வழக்கில் இருந்தால் அச்சொத்துக்களை அனுபவிப்பதற்கான பிராப்தம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்வதாற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.பத்தாம் இடத்தில் ஒன்பதிற்குரியவர் இருப்பதால் தர்ம கர்மாதிபதி யோகத்தை 10-ஆம் இடத்தில் ஏற்படுத்தி அதை நீசமாகவும், ஆட்சியாகவும் பெற்று நீசபங்கம் அடைந்து சனி பகவான் ஆட்சியாகவும், குரு பகவான் நீசமாகவும் நிற்பதால் அற்புத பலன்களை அடைவீர்கள். சனி பகவான் 4-ஆம் இடத்தை பார்ப்பதால் அடிக்கடி உடல் நலத்தில் கோளாறுகள் ஏற்படும்.

 

சுகங்கள், சந்தோஷங்கள் அதிகரித்தாலும் உடல் தேக பலத்தில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். கடின உழைப்பின் பலன் உங்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் கிடைக்கும். உடல் சோர்வுற்றவர்களுக்கு, தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆண்டு செல்வாக்கு அதிகரிக்கும்.ஏழாம் வீட்டை பார்க்கும் சனி பகவான் தடைபட்ட திருமணத்தை முடித்துவைப்பார். வியாபார நபர்களுடன் நல்ல ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி இடையே அந்யோனம் அதிகரிக்கும், மகிழ்ச்சி கூடும், பிள்ளைகள் விளையாட்டு மற்றும் இலக்கிய போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

 

சனி பகவான் உங்கள் ராசியில் வக்கிரகதி அடையக்கூடிய காலகட்டத்தில் தொழில் மேல்நோக்கி அமையும். உறவினர் மூலமாக பிரச்சனைகள் வரும். எனவே தொழில் செய்யும் மேஷ ராசி நேயர்கள் புது நபர்களிடம் வியாபாரம் செய்யுங்கள். சொந்தக்காரர்களுடன் சேர்ந்து தொழிலை செய்ய வேண்டாம். இந்த ஆண்டு ஆரோக்கிய சீர்கேடுகளில் சிறு சிறு தொந்தரவு ஏற்படும்.15-11-2020-ல் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-மாதத்திற்கு நல்லதை செய்யக்கூடிய நிலையில் அவர் இல்லை. ஏனென்றால் நீசமாக இருக்கிறார். ஆனால் அவருடைய காரகத்துவத்தில் கை வைப்பாரே தவிர பொருள் காரகத்துவத்தில் கை கொடுக்கமாட்டார். உயிர் காரகத்துவத்தில் கைகொடுப்பார். பிரிந்து இருந்த குடும்பம் ஒன்று சேரும்.

 

பொதுவாக குருவின் 10-ஆம் இடத்திற்கான சஞ்சாரம் சிறப்பாக இருக்காது. ‘ தொழிலில் 10-ல் குரு பரதேசி வாழ்க்கை ‘ என்ற பழமொழி உண்டு. ஏப்ரல் மாதத்தில் அதிசார ஓட்டத்தில் 11- ஆம் இடத்தில் கும்பராசிக்கு சென்று வக்கிரகதி நிலையில் அங்கேயே 4 மாதம் வரை இருக்கிறார். மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் 16 வரை அங்கேயே இருக்கிறார். அந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல பலனை அளிப்பார். இந்த சமயத்தில் மேஷ ராசி அன்பர்களுக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு உண்டு.

 

பணத்தட்டுப்பாடு இந்த ஆண்டு இருக்காது. பண பரிவர்த்தனைக்கு பங்கம் இருக்காது. குரு பெயர்ச்சி 2021 நவம்பர் மாதம் 14-ற்கு பிறகு ஏற்படுகிறது. குரு தன்னுடைய கும்ப ராசிக்கு செல்கிறார். லாப இல்லமும் அதுதான், பாதகஸ்தானமும் அதுதான். அந்த காலகட்டத்தில் உயிர் காரகத்துவத்தை அதிகமாகவும், பொருட்காரகத்துவத்தை குறைத்தும் கொடுப்பார்.உங்களுடைய ஜனன ஜாதகத்திற்கு தகுந்தாற்போல் இது மாறுபடும். இருந்தாலும் இதன் பொது பலன் 90% உங்களுக்கு நன்மையை தரும்.வெற்றிகரமான போக்கு நிலவும். இந்த காலகட்டத்தில் கடன் தொல்லைகள் தீரும். மேலும் ராகுவும் கேதுவும் உங்களுக்கு உழைக்க தயாராக இருக்கிறார்கள்.

 

இந்த ஆண்டு 10-ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் அதிக அளவிலான குடிப்பழக்கம், புகை பழக்கம் உள்ளவர்கள் இவற்றை குறைத்துக்கொண்டாலே போதும். ஞாயிறுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்யுங்கள்.சனிக்கிழமைகளில் கால பைரவர் வழிபாடு காவல் தெய்வ வழிபாடு அற்புதமான பலனாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *