சின்ன சின்னதாக செய்யும் காரியங்கள் பெரியளவில் வைரல் ஆகி விடுவது உண்டு. அதிலும் தற்போதைய காலங்களில் அநேக செயற்பாடுகள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. விளையாட்டு வினையாகும் என்று கூறுவார்கள்! வகையில் முதியவர் ஒருவர் முதுகு சொறிய ஜே.சி.பி பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. முதுகு சொறிய ஜே.சி.பி பயன்படுத்தியமையினால் மில்லியன் பேரை விழிபிதுங்க வைத்துள்ளார் இந்த வயது முதிந்த வயோதிபர்.

முதுகில் ஏற்றப்பட்ட கடி காரணமாக ஒரு சிறு துணி மூலம் முதுகினை சொறிந்து கொண்டு சென்றவர் துண்டால் முதுகினை சொறிந்த பின்னரும் அது திருப்தி அளிக்காத காரணத்தால், ஜே.சி.பி ஆபரேட்டரை கொண்டு இயந்திரத்தை இயக்க வைத்து சொரிந்து கொள்கிறார்.

கிரேன் ஆபரேட்டரும், இவர் கூறியதை கேட்டு இயந்திரத்தை இயங்க வைத்து அவ் முதியவரின் முதுகினை இயந்திரத்தின் மூலம் முதியவரின் முதுகில் சொறிந்து விடுகின்றார். முதியவரும் , கிரேன் ஆபரேட்டரும் விளையாட்டாக செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விளையாட்டாக பார்க்கப்பட்டாலும் பலரும் விளையாட்டு வினையாகக் கூடாது என முதியவரையும் , கிரேன் ஆப்ரேட்டரையும் எச்சரிக்கின்றனர்.

இதோ அந்த வீடியோ காட்சி !!
https://www.facebook.com/watch/?v=257727322285477