திருமணமான தம்பதிகள் செய்யவே கூடாத காரியங்கள்… என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா !!

விந்தை உலகம்

நமது முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி, திருமணமான ஆண்கள், பெண்கள் ஒருசில விஷயங்களை மட்டும் செய்ய கூடாது என்று கூறியுள்ளனர்.திருமணமான ஆண் பெண் செய்யக் கூடாத விஷயங்கள் என்ன?திருமணம் முடிந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு தாய், தந்தை இருந்தால், அவர்கள் வெள்ளிக் கிழமைகளில் ஷேவிங் செய்யக் கூடாது. உதிர்ந்த முடி, வெட்டிய நகத்தை வீட்டில் வைக்க கூடாது. ஆண் மற்றும் பெண்கள் எப்போதுமே இரண்டு கைகளை கன்னத்தில் வைத்தப்படி அமரவோ அல்லது நிற்கவோ கூடாது. ஆண் மற்றும் பெண்கள் உடுத்திய உடைகளை துவைக்காமல் கதவின் மேல் போடக் கூடாது. ஈரத்துணியை உடுத்தியபடியே சுற்றக் கூடாது.

 

திருமணம் முடிந்த ஆண் மறும் பெண் ஏதேனும் திருமண விழா, வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகளுக்கு சென்று வந்த உடனேயே குளிக்கக் கூடாது.அன்றாடம் சாப்பிடும் போது, உணவை, உள்ளங்கையில் படும்படியோ அல்லது உருட்டியோ சாப்பிடக் கூடாது. கோவிலில் விழுந்து வணங்கும் போது, அங்கப்ரதக்ஷிணம் செய்யும் போது மார்பு பூமியில் படும்படி வணங்க கூடாது. திருமணம் முடிந்த பெண்கள் எப்போதுமே மஞ்சள் கயிற்றில் மட்டுமே தாலியை அணிய வேண்டும்.

 

மேலும் பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டப்படி நடக்கக் கூடாது. கடவுளை வணங்கும் போது பின்னங்கால் இரண்டையும் சேர்த்து மண்டியிட்டு, நெற்றி, பூமியில் படும்படி கும்பிட வேண்டும். மேலும் கோவிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ள கூடாது.

 


திருமணமான பெண்கள் காலில் ஒருவிரலில் மட்டுமே மெட்டி அணிதல் வேண்டும். ஒரே காலில் இரண்டு, மூன்று விரல்களில் மெட்டி அணிதல் மற்றும் தெற்கே பார்த்து நின்றபடி கோலம் போடக் கூடாது. கர்ப்பமான பெண்கள் உக்கிரமான தெய்வங்களின் கோவில்களுக்கு செல்லக் கூடாது. அமாவசை மற்றும் தவசம் போன்ற நாட்களில் வீட்டு வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *