மிகவும் நீளமான கூந்தலை கொண்டிருக்கும் உலகின் முதல் இளம் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம் !! இப்படியும் ஒரு பின்னணி உள்ளதா !!

விந்தை உலகம்

ஒரு காலத்தில் பெண்கள் தங்களது கூந்தல் பராமரிப்பில் முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். அன்றைய காலங்களில் கூந்தல் பராமரிப்பில் பெண்கள் அதிக அக்கறையும் ஆர்வமும், பரபரப்பும் காணப்பட்டது. ஆனால் தற்போதைய நவீன வளர்ச்சி மாற்றத்தால் இந்த சூழ்நிலை தற்பொழுது மாறியுள்ளது என்றே கூற முடியும். அதிகளவிலான பெண்கள் தற்பொழுது இந்த கூந்தல் வளர்ப்பிலும் பராமரிப்பிலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் இங்கு ஒரு இளம் பெண்ணொருவர் தனது கூந்தலின் பராமரிப்பில் காட்டிய ஆர்வமும் அக்கறையாலும் அவருக்கு கிடைத்த அதிஷ்டதினால் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 


அதாவது இந்த இளம் பெண்ணின் கூந்தல் வளர்ச்சியின் காரணமாக உலகில் மிக நீளமான தலைமுடியைக் கொண்டுள்ள பெண் ஒருவர் என்ற சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். குறித்த இளம் பெண் குஜராத்தை சேர்ந்த நிலான்ஷி படேல் என்பவரே ஆவார். இவ்வாறு சாதனை படைத்துள்ள இவரது 5.7 அடி கூந்தல் தற்போது கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. உலக சாதனை வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்த இளம் பெண் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பாப் கட் செய்திருந்தேன்.

 

ஒரு கட்டத்தில் அந்த கட் எனக்கே அது பிடிக்காமல் போனது. பின்னர் என் பெற்றோருடன் இனி நான் தலை முடியை வெ ட்ட போவதில்லை என கூறினேன். அந்த நாள் தொடக்கம் இன்று வரை நான் எனது தலை முடியை வெட்ட வில்லை. சரியான முறையின் இதனை பராமரித்து வந்தேன் இதன் பரிசாக தற்போது உலக சாதனை சான்றிதழை ஏந்தி நிற்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

 

நிலான்ஷியின் இந்த முயற்சியை அங்கிகரிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அவருக்கு சாதனை சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *