நாளுக்கு நாள் புதினங்கள் மற்றும் நிகழ்வுகள் மாறிக்கொண்டு இருக்கும் உலகில் தற்பொழுது இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி வருபவர் தான் இந்த உலகின் மீன் வியாபாரி பெண். அதாவது இணையத்தை கலக்கும் இந்த உலகிலேயே மிக அழகான மீன் வியாபாரி பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் தற்போது பரவி வருகிறது. இது பற்றி மேலும் பரிந்து கொள்ளுவோமானால் குறித்த பெண் தாய்வான் சாங்ஹவுவா மாவட்டத்தை சேர்ந்தவர். 26 வயதுடைய லியு பெங்பெங் என்ற குறித்த இளம் பெண்ணின் தாயார் மீன் வியாபாரம் செய்து அதனை சந்தைகளில் விற்று வருகிறார்.
இவருடைய தாயாருக்கு உதவி புரியும் நோக்கத்தில் தான் குறித்த மீன்களுடன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த அழகிய பெண் லியு பெங்பெங் தனது தாயிக்கு உதவும் வகையில், தனது தாயின் மீன் கடையில் மீன் வியாபாரம் செய்துள்ள குறித்த காட்சிகள் தன தற்பொழுது செம வைரலாகியுள்ளது. எப்படியெனில் லியு பெங்பெங் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் போது அப்போது அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவரின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இப்படி பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த புகைப்படங்கள் எல்லாம் தனது 26 வயதில் உலகிலேயே மிக அழகான மீன் வியாபார பெண் என்ற பெயரில் இணையதளத்தில் வைரலாகி பரவியுள்ளது. அதே நேரத்தில் குறித்த பதிவினால் லியு பெங்பெங் பிரபலமாகியுள்ளார்.இது பற்றி லலியு பெங்பெங்வின் தாயார் கூறுகையில், தன்னுடைய மகள் மாடலிங் தோற்றங்களுக்கு இடையில் குடும்ப வணிகத்திறக்கும் அவள் உதவி செய்து வருகிறார்.
தன்னுடைய மகள் வியாபாரம் செய்யும் நாட்களில் நடக்கும் வியாபாரம் சராசரியான அளவை விட அதிகமாக விற்பனையாகும் என கூறினார். இது குறித்து லியு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கையில், என் குடும்பம் நான்கு தலைமுறைகளாக மீன் விற்பனை செய்து வருகிறது.வணிகம் நல்ல முறையில் இருப்பதற்கு, இங்கு உள்ள நிறையப் பேர் இப்போது தங்கள் தொலைபேசிகளில் என்னை படப்பிடிப்பு செய்வதில் பிஸியாக இருக்கிறார்கள், என் அம்மாவிடமிருந்து அவர்கள் அதிக மீன் வாங்குவதை நான் விரும்புகிறேன், என அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய காணொளி கீழே உள்ளது….