மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக்கூடாது… ஏன் தெரியுமா? அ தி ர் ச் சி தகவல் இதோ ..!!

விந்தை உலகம்

பால் உட்கொள்வதற்கு முன்பும் பின்பும் எந்த சுவையான உணவையும் உட்கொள்ள கூடாது என நமது பாட்டி சொல்லி கேட்டிருப்போம். எனவே பழைய கோட்பாடுகளின்படி பாலுக்கு முன்பு சுவையான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என தெரிகிறது. ஆனால்  இதை வைத்து மட்டும் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. எனவே இதுக்குறித்து இன்னும் விரிவாக பார்ப்போம். மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாமா? கூடாதா? ஆயுர்வேதத்தின் படி மீன் ஒரு அசைவமாகும். அதே சமயம் விலங்குகள் வழியாக உற்பத்தி செய்யப்பட்டாலும் பால் சைவமாக கருதப்படுகிறது. ஒரு தத்துவம் என்பது ஒவ்வொரு இடத்திலும் மாறுப்படுகிறது.

 


மீன், பால் இரண்டையும் உட்கொள்வது இ ர த் த த்தில் ஒரு வேதியியல் எதிர்வினையை ஏற்படுத்துகிறது. இது தோல் நிறமி அல்லது லுகோடெர்மா என்னும் நோய்க்கு வழி வகுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.மேலும் பால் உடலில் குளிரூட்டும் விளைவுகளைக் கொண்டுள்ளது. மீன் வெப்ப மூட்டும் விளைவை கொண்டுள்ளது. எனவே அவற்றை ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும் போது அவை உடலுக்கு தீமையை  விளைவிக்கும். மேலும் பல்வேறு ஒவ்வாமைகளை அது ஏற்படுத்தும் என கூறப்படுகிறது

 


​அறிவியல் பார்வை
ஆயுர்வேத பார்வையின் படி மீன் பால் இரண்டையும் சேர்த்து உண்பது உடலுக்கு தீமை விளைவிக்கும் என தெரிகிறது. ஆனால் அறிவியல் தத்துவத்தின் படி பால் மற்றும் மீன்களின் கலவையானது மனித உடலுக்கு தீமை விளைவிக்கும் என்பதற்கு எந்த வகையான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. மாறி வரும் உணவு கலாச்சாரத்தில் தற்சமயம் மீனை சமைப்பதற்கு கூட தயிர் மற்றும் பால் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இதயம் மற்றும் மூளை தொடர்பான நோய்களுக்கு இவை இரண்டையும் கலந்து உண்பது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

 


​நோய்திர்ப்பு சக்தி
மீன்களை உட்கொண்ட பிறகு நீங்கள் பாலை குடிக்கிறீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு புரதச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள். எனவே அவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. எனவே ஜீரண சக்தி உள்ளவர்களுக்கு இது பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக பா தி க் கி றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *