தினமும் பல் துலக்கும் டூத் பிரஷில் இவ்வளவு ஆ ப த் தா?.. இனியும் இந்த தவறை செய்யாதீர்கள் !!

விந்தை உலகம்

பல் தேய்க்கும் டூத் பிரஷ்ஷை மட்டும் சுத்தமாக கழுவி வைத்தால் பத்தாது. அதை நீங்கள் வைக்கும் ஹோல்டரை எப்படி வைத்திருக்கிறீர்கள்? என்பதைப் பொறுத்தும் ஆரோக்கியம் இருக்கிறது.நாம் டூத் பிரஷ்ஷை பயன்படுத்திவிட்டு ஹோல்டரில் வைத்து விட்டு சென்று விடுவோம். ஆனால் அதன் பிறகு கொசுக்களும், ஈக்களும் கண்ட இடங்களில் அமர்ந்து விட்டு, அந்த பிரஷில் வந்து உட்காரும்.அதனால் தான் பிரஷ்ஷை மூடி வைப்பது எப்பொழுதும் நல்லது. அது போல் டூத் பிரஷ் வைக்கும் ஹோல்டர்கள் மாதம் இரண்டு முறையாவது சுத்தம் செய்து வைக்க வேண்டும்.டூத் பிரஷ் மற்றும் டூத் பிரஸ் வைக்கும் ஹோல்டர் இவைகள் பாக்டீரியாக்கள் வாழும் இடமாக இருக்கிறது.நாம் தினமும் பல் துலக்கும் போது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் சுத்தம்செய்வதற்கு டூத் பிரஷ் போராடுகிறது.

 

அந்த டூத் பிரஷில் பாக்டீரியாக்கள் நீங்க ஒரு முறை எப்பொழுதும் சுடு தண்ணீரில் அலச வேண்டும்.ஆனால், அதை செய்வதற்கு நமக்கு நேரம் இருக்காது. டூத் பிரஷ்ஷை மூடுவதற்கு மூடி இருக்கும். அதனை தவறாமல் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.டூத் பிரஷ் ஹோல்டர்கள் சுத்தம் செய்யாமல் அப்படியே இருப்பதால் அதில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிடும். இதனால் காலப்போக்கில் அழுக்குகள் படிந்து விடும்.

 

அதில் இரண்டு டூத் பிரஷ்களை கொண்டு போய் வைக்கும் பொழுது அதனால் பரவும் பாக்டீரியாக்களின் தா க் க ம் நமக்கு தீங்கை விளைவிக்கும். மாதக்கணக்கில் அப்படியே கை படாமல் வைத்திருக்கிறோம். இந்த டூத் பிரஷ் ஹோல்டரை மாதம் இரண்டு முறை வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

 

பின்னர் பாத்திரம் கழுவும் லிக்விட்களை பயன்படுத்தி லேசாக தேய்த்தால், அடியில் இருக்கும் அழுக்குகளை எல்லாம் நீக்கிவிடும். பின்னர் வெயிலில் சிறிது நேரம் காய வைத்து எடுத்து மீண்டும் மாட்டிக் கொள்ளலாம்.

 

பேக்கிங் சோடா துர்நாற்றத்தையும், வினிகர் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையும் கொண்டுள்ளது. இதனால் இந்த இரண்டு பொருட்களும் வீட்டில் எப்பொழுதும் வைத்திருப்பது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *