சினிமாவையும் மிஞ்சிய அண்ணனின் பாச செயல் !! தங்கைக்கு சூப்பராக சப்ரைஸ் கொடுத்து அ ச த் திய அண்ணன் !!

விந்தை உலகம்

அண்ணன் தங்கை பாசம் பற்றி அதிகமாக கேள்வி பட்டு இருப்போம், ஆனால் இங்கு ஒரு அண்ணன் செய்த செயல் பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. பழுதடைந்த லேப்டாப்பிற்கு பதிலாக, 2 மாதங்களாக பணம் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப்பை தங்கைக்கு சர்ப்ரைஸாக வாங்கிக் கொடுத்து அண்ணன் அசத்தியுள்ளார். இப்படியான பாசக்கார அண்ணனின் செயல், நெட்டிசன்களின் ஏகோபித்த கவனத்தை பெற்றுள்ளது.அஜய் என்ற இளைஞர் சிவில் எஞ்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு தங்கை ஒருவர் உள்ளார்.அந்த தங்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த லேப்டாப் மிகவும் பழுதடைந்துள்ளது.

 

இதனால், ஆங்காங்கே சில இடங்களில் ஒட்டுபோட்டு பயன்படுத்தி வந்துள்ளார்.இதனை கவனித்த அண்ணன் அஜய், தங்கைக்கு தெரியாமல் 2 மாதங்களுக்கு மேலாக பணம் சேர்த்து புதிய லேப்டாப் ஒன்றை வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார்.நீங்கள் நினைக்கிற மாதிரி ஏதோ சாதாரண லேப்டாப் எல்லாம் கிடையாது.

 

1,22, 900 ரூபாய் மதிப்புள்ள MacBook Pro லேப்டாப்பை தங்கைக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.இதேவேளை, தங்கையின் பழைய லேப்டாப் புகைப்படங்களையும், புதிதாக வாங்கிக்கொடுத்த லேப்டாப் புகைப்படங்களையும் அவர் தனது இணைய பக்கத்தில் கடந்த ஜனவரி 4ம் தேதி பதிவேற்றம் செய்துள்ளார்.

 


நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த இந்த போஸ்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *