முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக் கண் நெ ரு ப் பி னை வெளியிட, அதை தா ங் கி ய வா யு பகவான் சரவணப் பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெ ரு ப் பு கள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்குத் தம்பியாகக் கருதப்படுகிறார்.
மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர். தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு இந்த சமயத்துடன் இணைந்தது.
முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு.-
மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில்.சூ ர சம் ஹா ர த் தி ன்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில்.பின் சூரனை இ ரு கூ றா க் கி ய தில் வந்த மயில்தான் அ சு ர மயில். ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்க முடியும்.மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது.
கந்தபுராணம் = ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது தான் கந்தபுராணம்..மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான். மொத்தத்தில் சஷ்டியில் விரதமிருந்தால், சகல சௌபாக்கியம் பெறுவோம் என்பதில் பெருத்த நம்பிக்கை உண்டு பக்தர்களிடம்…. முருகனை சுற்றி வரும் மயில்களின்
அற்புதமான காட்சிகள் கண்டு மகிழுங்கள்…