உங்கள் வீட்டிலுள்ள பண கஷ்டம் உடனடியாக தீர வேண்டுமா ? பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டிய இரண்டு பொருட்கள் !!

ஆன்மீகம்

அதிகமானவர்கள் எதிர்பார்ப்பது உடனடியாக வீட்டிலுள்ள பண கஷ்டம் தீர வேண்டும் என ஆனால் அதற்காந சரியான பரிகாரங்களை செய்ய மறந்து விடுகிறார்கள். செய்ய வேண்டிய காரியங்களை விட்டுவிட்டு எதையெதையோ பூஜை அறைகளில் செய்து வருவதால் உங்கள் வீடுகளில் உள்ள பண கஷ்டம் தீர்ந்து விடாது அதற்கு பதிலாக இன்னும் அதிக பண கஷ்டம் மட்டுமே ஏற்படும். என்ன தான் பெரிய பெரிய பரிகாரங்களை செய்து பார்த்தாலும், பணம் கையில் தங்கவே இல்லை என்ற கஷ்டம் உள்ளவர்களா நீங்கள் அப்படியாயின் இந்த சுலபமான பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். பரிகாரங்களை, வழிபாட்டு முறையில், இறை நம்பிக்கையோடு செய்தால் தான் முழுப் பலன் தரும் என்ற நம்பிக்கையோயுடன்.

 


இந்த பரிகாரத்தினை நீங்கள் தொடர்ந்து வாரம் தோறும் வரும் 3 வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம். மூன்று வாரம் முடிந்த பின்பு, உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட இந்த வழிபாட்டை நிறுத்தாமல் தொடர்ந்து செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது. இந்த பரிகாரத்திற்க்கு உங்களுக்கு தேவையான பொருள் சுத்தமான பசும் பாலும், சுத்தமான தேனும் தான். முடிந்தவர்கள் சுத்தமான பசும் பாலை வாங்கிக் கொள்ளுங்கள். முடியாதவர்கள் பாக்கெட் பாலில் இந்த பரிகாரத்தை செய்துகொள்ளலாம்.

 

வேறு வழி கிடையாது. உங்களுடைய வீட்டில் மாலை வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி 6 மணி அளவில் மகாலட்சுமியை வழிபடும் வழக்கம் இருக்கும். நம் எல்லோரது வீட்டிலும் வெள்ளிக்கிழமை பூஜை காலையிலும் மாலையிலும் செய்வோம். இந்த பரிகாரத்தை நீங்கள் காலை செய்தாலும் சரி, மாலை செய்தாலும் சரி. இன்று செய்ய வேண்டும் என்றால் மாலை நேரத்தில் 6 மணி அளவில் செய்யலாம். பூஜை அறையை அலங்காரம் செய்துவிட்டு, மகா லட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவு பாலோடு, 1/2 ஸ்பூன் தேன் ஊற்றி கலந்து, அதே கிண்ணத்திற்கு உள்ளே ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வைத்து விடவேண்டும்.

 


உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமி மந்திரத்தை 108 முறை உச்சரித்து உதிரி புஷ்பங்கள் மஹாலக்ஷ்மி தாயாருக்கு அர்ச்சனை செய்யுங்கள். ‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்தால் கூட போதும்.இறுதியாக தீப ஆராதனை காட்டி, உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இப்போது மகாலட்சுமி தாயாரின் திருவுருவப் படத்திற்கு கீழே வைத்திருக்கும் கிண்ணத்தில் இருந்து 1 ரூபாய் நாணயத்தை எடுத்து தண்ணீரில் கழுவ கூடாது.

 


ஒரு சிறிய துணியால் துடைத்துவிட்டு நீங்கள் பணம் சேமிக்கும் பர்ஸிலோ, பெட்டியிலோ அந்த நாணயத்தை போட்டு வைத்துக் கொள்ளலாம்.கிண்ணத்தில் மீதம் இருக்கும் அந்த பாலை உங்கள் நில வாசற்படிக்கு இரண்டு பக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி விடுங்கள். மொத்தமாகவே நீங்கள் இரண்டு ஸ்பூன் பாலைத்தான் பூஜைக்காக பயன்படுத்தி இருப்பீர்கள்.

 


நில வாசலுக்கு வெளியே நீங்கள் சென்றுவிட்டு, அதன் பின்பு வீட்டிற்கு உள் பக்கம் பார்த்தவாறு நின்று கொண்டார்கள். முதலில் வலது பக்கம் கொஞ்சமாக பால், அதன் பின்பு இடது பக்கம் கொஞ்சமாக பால் விட்டு விட்டு மகாலட்சுமி தாயார் உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று நினைத்தபடியே, நில வாசப்படியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டாலே போதும். வீட்டில் இருக்கக் கூடிய பணக்கஷ்டம் படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும். இந்த பரிகாரத்திற்க்கு நாம் பயன்படுத்தும் பால் சந்திரனின் அம்சம் பொருந்தியது.

 


இதோடு சேர்த்து கோமாதாவிடம் பெறக்கூடிய பாலில், மகாலட்சுமி முழுமையாக வாசம் செய்கின்றாள். சுக்கிரனின் அம்சம் கொண்டது தேன். இந்த பொருட்களெல்லாம் சேர்த்து பரிகாரத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் நமக்கு பா தி ப் பு ஏற்படுவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. நம்பிக்கையோடு செய்தவர்களுக்கு பலன் மட்டுமே கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *