ராகு காலத்தில் யாருக்கு பே ரா பத்து தெரியுமா? வக்ரமடைந்த செவ்வாய் பகவான், காத்திருக்கும் அதிர்ஷ்டம்!!

ஆன்மீகம்

ஐப்பசி மாதத்தில் நவ கிரகங்கள் செவ்வாய் பகவான் மீனம் ராசியில் வக்ரமடைந்துள்ளார். ரிஷபத்தில் ராகு, சிம்மத்தில் சுக்கிரன் கன்னி ராசியில் வக்ர புதன், துலாம் ராசியில் சூரியன், விருச்சிக ராசியில் கேது, தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நவ கிரகங்களின் இடமாற்றம் இந்த மாதம் சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். வக்ரமடைந்த புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கிரகங்களின் இடமாற்றம் சஞ்சாரத்தினால் சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம் ராசிக்காரர்களே

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்க ராசிக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் தன ஸ்தான அதிபதி புதன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார் கூடவே சுக்கிரனும் இணைவதால் பணவரவு அபரிமிதமாக இருக்கும். தொழில் முயற்சியில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பு கூடும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக இருக்கும்.

Advantages of technology in business | Techno FAQ

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு பெருமை கிடைக்கும். அப்பாவிற்கு உத்யோக உயர்வு கிடைக்கும். இடமாற்றங்கள் நல்ல முறையில் நடைபெறும். பூர்வீக சொத்து லாபம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும். குரு வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதுநாள் வரை இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரும்.

யாருக்கெல்லாம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு?- Dinamani

மாணவர்களுக்கு நல்ல நேரம் கூடி வந்திருக்கிறது. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்கும்.

சந்திராஷ்டமம் | சர்வமங்களம் | Sarvamangalam

நன்மைகள் இந்த மாதம் சந்திராஷ்டமம் 12ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.26 மணி முதல் 14ஆம் தேதி மாலை 4.43 மணிவரை எச்சரிக்கையாக இருக்கவும். கால பைரவரை ராகு காலத்தில் மாதம் முழுவதும் வழிபட நன்மைகள் நடைபெறும். சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் உற்சாகமும் சந்தோஷமும் நிறைந்த மாதமாகும்.

கன்னி ராசிக்காரர்களே

புத்தி காரகன் புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த ஐப்பசி மாதத்தில் உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்க ராசியில் சுக்கிரன் புதன் சஞ்சரிப்பதால் முகத்தில் பொலிவு கூடும் சகலவிதமான நன்மைகள் நடைபெறும்.

எப்படி இருக்கும் 2019 சம்பள உயர்வு? | Dinamalar

உத்தியோக உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். கல்வித்துறையில் வேலை செய்பவர்களுக்கு தன வரவு திருப்திகரமாக இருக்கும். தகப்பனார் வழி சொத்துக்கள் கிடைக்கும்.

professors to get rs forty thousand salary: பேராசிரியர்களுக்கு மாதத்திற்கு  ரூ.40,000 வரை சம்பள உயர்வு! - 7th pay commission :professors to get rs  40,000 salary | Samayam Tamil

அப்பா வழியில் நன்மைகள் நடைபெறும். அரசு பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் தேடி வரும். குரு பகவானால் நன்மைகள் நடைபெறும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

அந்தரங்கம் | உங்களுக்காக | பக்கம் 39

செவ்வாய் வக்ரகதியில் இருப்பதால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேரும் நேரம் நெருங்கி விட்டது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு திருமண யோகம் கை கூடி வருகிறது. வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது.

உங்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்! |  Signs You Might Have Nerve Damage - Tamil BoldSky

நரம்பு பிரச்சினைகள் நீங்கும். ஐப்பசி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு சகலவிதமான நன்மைகளும் நடைபெறும். இந்த மாதம் சந்திராஷ்டமம் ஐப்பசி 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.44 மணி முதல் ஐப்பசி 17ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *