யாராலும் கணிக்க முடியாத குணத்தை கொண்டுள்ள அன்பர்களே.. இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், பாதுகாப்பற்றவர்களாகவும், சந்தேகமான மன நிலையுடன் காணப்படும் நபராகவும் இருப்பார்கள். இவர்கள் நெருக்கமான உறவுகளால் கா ய ப் ப டு பவர்களாகவும், நிராகரிக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் இவர்கள் கற்பனை திறன் வாய்ந்தவர்களும் கூட. அதே நேரத்தில் சூழ்நிலையை சமாளிக்க வலுவான மன நிலையுடனும் உறுதியுடனும் செயல்பட்டு வெற்றி காண்பார்கள். உங்களுக்கு இந்த பெப்ரவரி மாதம் எந்த மாதிரியான அணுகூலன்களை கொடுக்கப் போகிறது என்பதை தொழில் ரீதியாக, உடல் நலம், பண வரவு மற்றும் குடும்ப நிலை, அதிர்ஷ்ட எண், தேதி மற்றும் நிறங்கள் இவற்றின் அடிப்படையில் உங்களுக்கு நாங்கள் கூறப் போகிறோம். இது உங்களுக்கு வரப் போகிற காலத்தை நன்கு புரிந்து கொண்டு வெற்றி காண உதவும்.
பொருளாதாரம்=இந்த மாதத்தில் உங்கள் பொருளாதாரத்தை பொருத்த வரை எந்தவொரு பெரிதான மாற்றமும் நிகழப் போவதில்லை.போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பணக் கஷ்ட மாதமும் கூட. எனவே இந்த துறையில் இருப்பவர்கள் முன்னரே பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.எனவே உங்கள் பொருளாதாரத்தை சிக்கனமாக செலவழித்து சேமித்து செயல்படுவது பணத் தட்டுப்பாட்டை சமாளிக்க உதவும்.
காதல்=இந்த மாதம் உங்கள் துணையுடனான உறவு காதல் உணர்வை விட உணர்வுப் பூர்வமான ஒன்றாக இருக்கும். உங்கள் துணையிடமிருந்து நிதி சுதந்திரம், செலவு செய்ய உரிமை போன்றவற்றை பெறுவீர்கள்.நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நாட்களை அன்புடன் கொண்டாடுவீர்கள். கல்யாணமாகதவர்களுக்கு நட்பு வட்டாரத்தின் வழியாகவே ஒரு காதல் துணை அமைய வாய்ப்புள்ளது.இருப்பினும் பொருளாதார ரீதியான சில சங்கடங்களையும் காதல் உறவுகளில் சந்திக்க நேரிடும்.
உடல் நலம்=இந்த மாதம் உங்கள் உணவுப் பழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உடம்பில் இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல தூ க் க ம் நல்ல உடல் நலத்துடன் இருக்க உதவும்.
தொழில்=இந்த மாதம் உங்கள் தொழில் சிறக்க ஏதுவான மாதமாகும். தொழில் சார்ந்த பயணங்கள் நன்மைகளை ஈட்டித் தரும். அதே நேரத்தில் அதிர்ஷ்டத்தின் வழியாக பெரிய வாய்ப்புகள் வந்து சேரும். எனவே இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்கள் கையில்.
இந்த மாத அதிர்ஷ்டம் = அதிர்ஷ்டமான எண்கள் :17,40,46,61மற்றும் 76=அதிர்ஷ்டமான தேதிகள் :6,7,8,17,18,25,26=அதிர்ஷ்டமான நிறங்கள் :சிவப்பு, ஆப்பிள் பச்சை, மற்றும் நீல வான நீறம்.எனவே கோபத்தின் உச்சத்தில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டத்திலும் பேரதிஷ்டம் வந்து கிடைக்குமாம்.