வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா அப்படி என்றால் இதை ஒருமுறையாவது கட்டாயம் செய்யுங்கள்!!

ஆன்மீகம்

வீட்டில் வறுமை மற்றும் கஷ்டங்கள் ஒழிந்து, செல்வங்கள் நிறைந்து இருப்பதற்கு ஒரு எளிய பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு கால நேரங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. வீட்டில் செல்வம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும்?ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடிக் கிண்ணம் எடுத்துக் கொண்டு அதில் சம அளவு உப்பு, சர்க்கரை மற்றும் அரிசி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

பின் அந்த கிண்ணத்தின் நடுவில் காப்பூசி எனப்படும் சேப்டி பின் ஒன்றை மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். அந்த கிண்ணத்தை கையில் ஏந்தியவாறு கடவுளிடம், தங்களுக்கு என்றும் உணவு, உடை, இறுப்பிடம் மற்றும் செல்வம் ஆகிய அனைத்து தங்கி இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துக் கொண்டு வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அதை மூடாமல் வைத்து விட வேண்டும்.

தினமும் ஒருமுறை இந்தக் கிண்ணத்தைப் பார்த்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்து வர வேண்டும். இதற்காக மந்திர உச்சரிப்புகள் ஏதும் கூற வேண்டும் என்பது அவசியமில்லை.மேலும் இந்தக் கிண்ணம் தூசி படர்ந்து அழுக்கானதும் வேறு ஒன்றை இதே முறையில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதை உங்கள் வாழ்நாட்கள் முழுவது செய்து வரலாம் பல நன்மைகள் கிடைப்பதுடன், நமது வீட்டில் அன்றாடம் சிறு முன்னேற்றமாவது வந்துக் கொண்டிருப்பதை நிங்கள் கண்கூடாகக் காணலாம்.

குறிப்பு இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை இரவில் 8-9 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும். மேலும் இந்தக் கிண்ணத்தை நமது வீட்டின் தென் மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும், வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைப்பது இரட்டிப்பு பலனைக் கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *