நம்முடைய அன்றாட உணவுகளில் நாம் அதிகமாக பயன்படுத்துவது முட்டை மற்றும் சிக்கன் ஆகும். அதிகமாக சிக்கனை விரும்பி சாப்பிடுபவர்கள் உண்டு. அத்துடன் முட்டையினை ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் போன்றவற்றுக்காக அதிகமாக பயன்படுத்துகின்றனர். முட்டையில் அதிகளவு பயன்கள் இருந்தாலும் தற்பொழுது பறவைக் காய்ச்சல் எதிரொலி காரணமாக பச்சை முட்டை மற்றும் ஆஃப் பாயில் போன்றவற்றை சாப்பிட வேண்டாம் என தமிழ் நாடு கால் நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கால் நடை சுகாதார ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் இன்னும் கொரோனா வைரஸ் பிரச்சனை முழுமையாகக் கட்டுக்குள் வராமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைகளுக்கு ம ர் ம வை ர ஸ் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு உ யி ரி ழ ப் பது அதிகமாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக வட இந்திய மாநிலங்களின் கடும் குளிர் காரணமாக இந்த வைரஸ் ப ர வு வ து அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவது குறித்த ஆலோசனைகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கால்நடை சுகாதார ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘இதுவரை பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு கண்டறியப்படவில்லை. ஆனாலும் பரவ வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இதனால் இந்த பிரச்சனை நீங்கும் வரை கோழி, வாத்து ஆகியவற்றின்
இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும் என்றும் அவ்வாறு 70 டிகிரியில் வேக வைத்தால் கிருமிகள் இ ற ந் து வி டு ம் என்றும் பச்சை முட்டை மற்றும் ஆஃப் பாயில் ஆகியவற்றை தவிர்க்கலாம்’ எனக் கூறியுள்ளார்.