ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த 2 வயது வீரத் தமிழச்சி !! இணையத்தில் பட்டையை கிளப்பும் நிகழ்வு !!

விந்தை உலகம்

ஜல்லிக்கட்டு காளையுடன் வந்த 2 வயது சிறுமி…..

தமிழர்களின் வீரத்திற்கு பெயர் போன விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு போட்டி தான். அன்று தொடக்கம் இன்று வரைக்கும் உலகம் பேசும் ஒரு விளையாட்டாக காணப்படுகிறது. கடந்த காலங்களில் இதற்கு எதிராக வந்த பிரச்சனைகள் மத்தியிலும் அதனை வென்று வீறு நடை போடும் அளவுக்கு உலகம் முழுவதும் இதன் பெருமை பேசப்பட்டது யாவரும் அறிந்ததே

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அந்த ஊரை சேர்ந்த 2 வயது சிறுமி ஒருவர் காளையை அழைத்து வந்த புகைப்படம் தற்பொழுது இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

இன்றைய போட்டியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர், போட்டியை காண ராகுல் காந்தி வருகை தருவார் என கூறப்பட்டது. இப்போட்டியில் 430 மாடு பிடிவீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க உள்ளனர், மேலும் சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறங்கவுள்ளனர்.

இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் குருநாதன் என்ற கிராமத்திற்குச் சொந்தமான காளையை 2 வயது சிறுமி உதயா தைரியமாக அழைத்து வந்தார்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைடபடம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *