வித்தியாச அம்மியில் பெண் செய்த செயல் !! பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ காட்சி !!

காணொளி

ஏறக்குறைய நாற்பது கிலோ கொண்டது தான் அம்மி. இந்த அம்மியானது கிராமங்களில் ஊருக்குப் பொதுவான இடத்தில் ஓர் அம்மியும் ஓர் ஆட்டுக்கல்லும் வைக்கப்படும். தேவையானவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்மியானது கருங்கல்லினால்  செய்யப்பட்ட, சமையலில் பயன்படும் பொருட்களை அரைப்பதற்கு உதவக்கூடிய, சமதளமாக அமைந்த ஒரு கருவியாகும். அம்மிக் கல்லில் பொருளை இட்டு அரைக்க குழவி என்று அழைக்கப்படும் ஒரு கருங்கல் பயன்படுகின்றது. இந்தக் குழவியை இரு கைகளாலும் பற்றி, உருட்டியும் இடித்தும் இழுத்தும் பொருட்கள் அரைக்கப்படும். முந்தைய காலத்தில் பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளில் ஆயிரம் அர்த்தம் இருந்துள்ளது.

ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அந்த காலப் பெண்கள் வீட்டு வேலை செய்தத்தில் ஒவ்வொரு அர்த்தம் நிறைந்து காணப்பட்டது இன்றைய காலங்களில் இதன் பயன்பாடு குறைந்து விட்டது என்பதை விட மறந்து விட்டார்கள் என்றே கூறமுடியும். அமராமல் குனிந்து கோலம் போடுவதால் கர்ப்பப்பை பலப்படும் என்பது எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்.

அது மட்டும் இன்றி இந்த அம்மி அரைப்பதால் பெண்களின் கைகள் பலப்படும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு ஏறாது. இப்படி ஒவ்வொரு வேலையும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தந்தது. அதனாலேயே எந்த வித உபாதைகளும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டதோடு நோய்களும் பெருகிவிட்டது.

இங்கு பெண் ஒருவர் பாரிய அம்மி கல்லில் மசாலா அரைக்கும் காட்சியைக் காணலாம்.

https://www.facebook.com/watch/?v=1279805768861349

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *