இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா !! வரம் கொடுக்க குறிவைத்திருக்கும் குபேரன் !!

ஆன்மீகம்

கோடீஸ்வரர் யோகம் கிடைக்கப்போகும் ராசி ….

ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள்.சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம்.

அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். ஜோதிடத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பது வரை மிகத் தெளிவாக ஜோடதிடத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு நாள் பார்க்கும் பலன் அன்றோடு முடிவதில்லை.கிட்டதட்ட ஒரு வாரமாவது அதன் பலன்கள் நீடிக்கும். இந்த வாரம் வரம் கொடுக்க குறி வைத்திருகிறார் குபேரன். அப்படி இந்த வாரம் அதிஷ்டக்கார ராசிக்காரர் யார் என்று பார்க்கலாம்.

மிதுனம்
பயணங்களின் வழியில் தன லாபம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். இதுவரை ஒளித்து வைத்திருந்த அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்தும் காலம் இது.வீட்டில் குழந்தைகளின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு எடுத்த காரியங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பல நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளை கவனமாக தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

சிம்மம்
தொழிலில் புதிய திட்டங்களை தீட்டி அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். உடன் பிறப்புகளால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சியும் பெருமையும் அடைவீர்கள். உடல் நலத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மனதில் வீண் கவலைகள் தோன்றி மறையும். எதிலும் சிறிது கவனத்துடன் செயல்படுவது நல்லது.போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை நாளில் சுக்கிரனை வழிபடுங்கள்.

துலாம்
பணியில் ஏற்றுக்கொண்ட பொறுப்பை செய்து முடிக்கும்வரை ஓய மாட்டீர்கள். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமான நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவீர்கள்.கடல்வழி பயணங்களால் நன்மை உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். பொருள்சேர்க்கை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி புகழ் அடைவீர்கள். முருகப்பெருமானை வழிபடுங்கள்

தனுசு
சேமிப்புகள் அதிகமாகும். ஆடம்பரச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் லாபம் உங்களுக்குத்தான். கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள்.ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டில் பெரியவர்களுடன் இருந்து வந்த சிறுசிறு கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். உங்களுடைய பேச்சு வன்மையால் பெருமைகள் உண்டாகும். தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். சிவபெருமானை வழிபட்டு வாருங்கள்.

மீனம்
பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவது குறித்த முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பண விஷயங்களில் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக செயல்படுங்கள்.வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவிகள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *