இன்று அதிர்ஷ்டசாலியான ராசிக்காரங்க யார் தெரியுமா !! பெரும் மாற்றத்தை சந்திக்கும் ராசியினர் யார் !!

மருத்துவம்

இன்றைய ராசிபலன்…

மேஷம் – ஒவ்வொரு நாளும் ஏதாவது மாற்றம் ஏற்படாத என்ற ஆசை எல்லோருக்குள்ளும் கட்டாயம் இருக்கும், ஆனால் ஒருவரின் கிரக நிலையே இந்த மாற்றத்தை கொண்டு வருகிறது. அதன்படி இன்று மேஷ ராசியினருக்கு பிரச்சினைகள் தீரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வரவு திருப்தி தரும். வாகன யோகம் உண்டு. இடம், பூமி வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

ரிஷபம் – சந்தோ‌ஷங்களைச் சந்திக்கும் நாள். வில கிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேரலாம். வீட்டை பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வி ரோ த ங் கள் விலகும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

மிதுனம் – கு ழப்பங்கள் அகலும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பால் மனநிறைவு கூடும். வீடு, இடம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.

கடகம் – பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுப் பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வரும் சூழ்நிலை உருவாகும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.

சிம்மம் -சங்கடங்களைச் சமாளிக்கும் நாள். த டைகள் அகல நண்பர்கள் உறுதுணை புரிவர். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். உறவினர் வழியிலும், நண்பர் கள் வழியிலும் விரயங்கள் அதிகரிக்கும்.

கன்னி – பணியாளர் தொல்லை அகலும் நாள். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். கல்யாண முயற்சி கைகூடும்.

துலாம் – அலுவலகப் பிரச்சினைகள் அகலும் நாள். நல்ல தகவல்கள் நாடி வந்து சேரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

விருச்சகம் – எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும்.

தனுசு – விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வருமானத்தை விட செலவுகளே அதிகரிக்கும். பயணத்தால் சோர்வு, ஏற்படலாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் கோ ப த் திற் கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

மகரம் – நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் ப ர வ ச ம் ஏற்படும். பயணம் பலன் தரும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

கும்பம் – உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உத்தியோக முயற்சி கைகூடும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். கடன் சுமைகளை குறைக்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மீனம் – எ தி ர் ப்புகள் விலகும் நாள். உதிரிவருமானங்கள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமை கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கட்டிடப் பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *