ஆண்களுக்கு நிகராக இணையத்தை கலக்கிய பெண்கள்… ஆ ச் சர்யத்தில் இணைய வாசிகள் !

காணொளி

ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள் என்று சொல்வார்கள்.. உண்மைதான்.. பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல,  பெண்களுக்கு எதிலும் சம உரிமை என கூறப்பட்டு வந்த வார்த்தைகாலை இன்று பெண்கள் நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தை முன்னேற்றவும், குழந்தைகளின் எதிர்காலத்தை சரியான தொலைநோக்கோடு கொண்டு செல்லவும் பெண்களின் பங்கு என்பது இன்று முக்கிய பங்காக காணப்படுகின்றது. பெண்ணின் வைராக்கியம் என்பது ஆணை விட வலியது. உடல் ரீதியான உறுதியில் ஆண் வலியவன் என்றால், மன ரீதியான உறுதியில் பெண் வலியவள்.. தற்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் பெண் மனரீதியான வலிமை உடையவள் என்பதனை அதிகமாக உறுதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வீடோ அலுவலகமோ அவர்களின் திறமை பளிச்சிடுகிறது. ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும் புத்திசாலித்தனம் அவர்களின் திறமையை உலகிற்கு பறைசாற்றுகிறது. பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் வைரலாகி வருகிறது காணொளி ஒன்று.

ஹைதராபாத்தில் புடவை அணிந்து கொண்டு பெண்கள் 3 பேர் யமஹா ஆர்15 பைக்கை ஓட்டிச் சென்றுள்ளனர். இம்மாதிரியான வண்டிகளை சரியான பயிற்சி இல்லாமல் இயக்குவது என்பது கடினமாம். அதுவும் புடவையைக் கட்டிக் கொண்டு இயக்குவது என்பது சற்று பயத்தினை ஏற்படுத்தக் கூடியதே.

ஒருபக்கம் பலர் இவர்களை புகழ்ந்தாலும் ஒரு சிலர் தலைக்கவனம் அணியாமலும், புடவை கட்டிக்கொண்டு செல்வதும் ஆபத்தாகும் என்கின்றனர்.

இதோ அந்த வீடியோ காட்சி ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *