பல் வலி அதிகமா இருக்கா? இந்த ஒரு இயற்கை பொருள் போதும்… ஒரு துளி வி டு ங்க அ தி ச ய ம் நடக்கும் !!

மருத்துவம்

இந்த ஒரு இயற்கை பொருள் போதும்…

கிராம்பு எண்ணெயை கொண்டு பல் வலியின் பிரச்சனையை வெகுவாக குறைக்க முடியுமாம்.எப்படி பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கிட்டா வலி இருக்கும் போது சட்டுன்னு பயன்படுத்தலாம். பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகுமளவுக்கு மற்ற நோய்கள் எதையும் கவனிக்கவிடாது. அவ்வளவு பாடுபடுத்தும்.பல் வலிக்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளித்தாலும் தாங்க முடியாத வலியின் பிரச்சனையை குறைக்க உடனடி வைத்தியத்தை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

மற்ற வலிகளை காட்டிலும் பல் வலி உ பா தை அதிகமாக இருக்கும். பல் வலிக்கு விரைவான தீர்வளிக்க விரும்பினால் நீங்கள் கிராம்பு எண்ணெயை பயன்படுத்தலாம். இது நிச்சயம் உங்கள் வலியை குறைக்க கூடிய நிவாரண பொருளாக இருக்கும். இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

​கிராம்பு எண்ணெய் எப்படி பல்வலியை குறைக்கிறது?
கிராம்புகளில் உள்ள முக்கியமான பொருள் யூஜெனோல் ஆகும். இது கிராம்பு எண்ணெய் மற்றும் இலவங்கப்பட்டை மற்றும் துளசி ஆகியவற்றில் உள்ள சிறந்த கலவை. இதுதான் கிராம்பின் நறுமணத்துக்கு காரணமாகிறது. பல்வலிக்கு கிராம்பு எண்ணெய் பயன்படுத்தும் போது யூஜெனோல் வலியை குறைக்கும் வகையில் செயல்படுகிறது.

கிராம்பு எண்ணெய் வாய்வழி ஆரோக்கியத்துக்கு குறிப்பாக வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை எ தி ர் த்து ப் போராட உதவுகிறது. கிராம்பு எண்ணெய் என்பது இயற்கையான பாக்டீரியா எ தி ர் ப் பு குணங்களை கொண்டிருக்க கூடியதாக சொல்லப்படுகிறது.

இது கரியோஜெனிக் மற்றும் பீரியண்டர்ல் நோய்க்கிருமி பாக்டீரியாக்களுக்கு எ தி ரா க பாதுகாப்பை வழங்க செய்யும். பல் வலி இருக்கும் போது அதிகமாக இருக்கும் போது கிராம்பு எண்ணெய் வலி உ பா தை யை குறைக்கும். அதே நேரம் பல் மருத்துவரை சந்தித்து பல் வலிக்கான காரணத்தை அறிந்து சிகிச்சை மேற்கொள்வதும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *