வினையாகிய விளையாட்டு !! … குழந்தையை நினைத்து பரிதாபப்படும் இணையவாசிகள் – வைரல் வீடியோ உள்ளே !!

காணொளி

குளிர்பானம் நிரம்பிய கண்ணாடி கோப்பையை பிடிக்க போய் குழந்தையை கீழே தவறவிடும் மூதாட்டியின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. சமூகவலைதளங்களில் ஏராளமான வீடியோக்களும் போட்டோக்களும் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒரு சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். என்ன காரணத்தினால் அவை வைரலாகின்றன என ஆராயாமல், அவற்றை ரசித்து விட்டு நகர்வது புத்திசாலித்தனம். அந்த வகையில் தற்போது வைரலாகியுள்ள வீடியோவில் ஒரு பாட்டியும், அவரது பேரக்குழந்தையும் இருக்கிறார்கள். பாட்டி சோபாவில் அமர்ந்திரக்கிறார். அவருக்கு அருகில் குழந்தை ஒன்று நின்று கொண்டிருக்கிறது. சோபாவுக்கு முன்பு உள்ள டீப்பாயில் இரண்டு கண்ணாடி கிளாஸ்களில் குளிர்பானம் நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அதில் ஒரு கிளாஸை குழந்தை எடுக்க முட்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கிளாஸை குழந்தை தள்ளிவிட்டு விடுகிறது. அப்போது அந்த பாட்டி அவசர அவசரமாக அந்த கிளாஸ் கீழே விழுந்து உடைந்து விடாமல் இருக்க அதனைத் தாவிப் பிடித்து விடுகிறார். ஆனால் குழந்தை நிலை தடுமாறி தவறி கீழே விழுந்துவிடுகிறது.

மூன்று விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவை இதுவரை 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கிளாஸை பிடிக்கப் போய் குழந்தையை தவறவிட்ட பாட்டியை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். ஒரு சிலரோ பாட்டிக்கு ஆதரவாகக் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

அதாவது, ‘குழந்தை கீழே விழும் என்று அந்தப் பாட்டி நினைக்கவில்லை.. இல்லையென்றால் நிச்சயம் கிளாஸை விட்டு விட்டு குழந்தையைப் பிடித்திருப்பார்.

அதோடு, கிளாஸ் கீழே விழுந்து உடைந்தால் அக்குழந்தைக்கும் காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதாலேயே பாட்டி அதனைப் பாய்ந்து பிடித்தார்’ என பாட்டிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர் சிலர்.

இணையவாசிகள் மத்தியில் வைரல் ஆகி வரும் வீடியோ காட்சி இதோ ——–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *