வீட்டில் விளக்கேற்றும் முன்பு இந்த மந்திரத்தை சொல்லுங்க… அதிசயம் நிச்சயம் நடக்கும்!! கண்டிப்பா செய்து பாருங்க!!

ஆன்மீகம்

மாலையில் விளக்கு ஏற்றுவதற்கு முன் நாம் அந்த விளக்கின் தாத்பரியம் தெரிந்து கொள்வதும், தீபம் ஏற்றும் முன் சொல்ல வேண்டிய மந்திரத்தையும் தெரிந்து கொள்வோம்.

விளக்கேற்றினால் ஒளி வரும். ஒளி இருளிலிருந்து நமக்கு பாதையைக் காட்டுவது இயல்பும். அப்படிப்பட்ட விளக்கை தீபமாக இறைவன் முன் ஏற்றும் போது நம் நோய் நொடிகளை அழித்து, குறையாத செல்வத்தை அளிப்பார். இருளைப் போல நம் அறியாமையை அழித்து அறிவு சுடர் உண்டாகும். விளக்கேற்றும் முன் சொல்லும் மந்திரம் : ஸுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தநஸம்பத: | ஸத்ருபுத்திவிநாஸாய தீபஜ்யோதிர் நமோஸ்துதே ||பொருள் :

விளக்கின் ஒளி நமக்கு நல்ல பேறினையும், பல நன்மைகளையும் அளிக்கும். குன்றாத செல்வமும், நம் அறிவின் பகையான அறியாமையை நீக்கக்கூடியதற்கு நமஸ்காரம்.

தீபத்தின் தத்துவம் :
தீபமூலே ஸ்திதோ ப்ரஹ்மா தீபமத்யே ஜநார்தந: | தீபாக்ரே ஸங்கரே: ப்ரோக்த: ஸந்த்யாதீப நமோஸ்துதே ||
மும்மூர்த்திகளை விளக்கும் வகையில் தீபம் விளங்குகிறது. தீபத்தின் அடிப்பகுதியில் பிரம்ம தேவனும், தீபத்தின் நடுப்பகுதியில் காக்கும் கடவுள் மகா விஷ்ணுவும், தீபத்தின் மேல் பகுதி அழிக்கும் கடவுளான சிவபெருமானும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஸ்ந்த்யா தீபமே உன்னை வணங்குகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *