கிராமத்து கூட்டுக்குடும்ப குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும் சொர்க்கம் இது.. பொத்தி பொத்தி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு இந்த பாக்கியம் கிடைக்காது..!

காணொளி

குழந்தைகளை குழந்தைகளாகவே வைத்திருப்பது தான் அந்த வயதுக்கான பொழுதுபோக்கைத் தரும். நாம் நம் குழந்தைப் பருவத்தில் அனுபவித்ததை இப்போது நம் சந்ததிகள் அனுபவிக்கிறார்களா? என்றால் படக்கென இல்லை என சொல்லிவிடலாம்.

கோழிக் குண்டு, பம்பரம், பரமபதம், நொண்டி விளையாட்டு, கபடி என இருந்த நம் காலத்திய விளையாட்டுகள் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்குத் தெரியவில்லை. பீட்சாவும், பர்கரும் சாப்பிட்டுக் கொண்டே செல்போனில் கேம்ஸ் விளையாடுகிறார்கள். இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இப்போது நகர்ப்புறங்களில் அடுக்குமாடிக்குடியிருப்புகளில் வாழும் குழந்தைகளின் நிலை இன்னும் பரிதாபம். எப்போதும் வீட்டுக்குள்ளே பொத்தி, பொத்தி எதோ பிராய்லர் கோழிகளைப் போல வளர்க்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் நாட்டுக்கோழிகளாக சுதந்திரமாக திரியும் வாய்ப்பையும் இழந்துவிடுகிறார்கள்.

நகர்ப்புறங்களில் நெருக்கடியான சூழலில் வாழும் குழந்தைகளுடன் தாத்தா, பாட்டியும் இருப்பதில்லை. எப்போதாவது பாட்டி, தாத்தா வீட்டுக்கு லீவுக்கு சென்று திரும்புவது தான் நடக்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டால் கிராமத்து வாழ்க்கையும், அதிலும்கூட்டுக் குடும்பமாக தாத்தா, பாட்டியோடு சேர்ந்து குழந்தைகள் வளர்வது சொர்க்கம் என்றே சொல்லிவிடலாம். இதோ இங்கேயும் அப்படித்தான்.

தன் தாத்தாவோடு லேசா பெய்யும் மழைச்சாரலுக்கு மத்தியில் பொடியன் ஒருவன் நடையோ, நடை என ஸ்டைலாக வாக் செய்கிறான். தாத்தாவும் அந்த பொடியனோடு சேர்ந்து மழையில் நனைந்தபடி நடக்கிறார். தாத்தாவும் கூட குழந்தையாகிப் போய் இருக்கும் அந்த தருணம் பார்க்கவே அலாதியாக இருக்கிறது. பொத்தி, பொத்தி வளர்க்கப்படும் நகர்ப்புற குழந்தைகளுக்கு கிடைக்கவே செய்யாத சொர்க்கம் இது. இதோ நீங்களே காணொலியைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *