புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்’ என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் துாய்மை மிகவும் முக்கியமாகும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய-, மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்து கொடுத்தாலும் அதை முறையாக பின்பற்றுவது சமூகத்தின் கடமை 1976ம் ஆண்டு 42-வது சட்டதிருத்தத்தின்படி மனித கடமைகளின் ஒன்று சுற்றுச்சூழலை பாதுகாப்பது.
இந்திய குடிமக்கள் அனைவரும் காடுகள், ஏரிகள், கடல்கள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும்’ என்பது தலையாய கடமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.உலகில் அதிசயங்களுக்கு பற்றாக்குறையே இல்லை. தினம் தினம் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.ஆனால், அவை யாவும் நாம் அறிந்திருப்பதில்லை என்பது தான் நிதர்சனம். சில மனிதர்களின் செயல்கள் கூட அதிசயம் போல பிரம்மிக்க வைக்கும்.
ஆனால், நம்மை பாதுகாத்து வரும் இந்த இயற்கையை விட பெரியதோர் அதிசயத்தை நாம் கண்டுவிட முடியாது.
இயற்கையை விட இரம்மியமான காட்சி வேறு என்ன இருக்கிறது. இதுவரை புவியியலில் தானாக உருவான அதிசய காட்சிதான் இது.