முள்ளம் பன்றியை வே-ட்டையாட சிறுத்தை போட்ட மாஸ்டர் பிளான் இறுதியில் நடந்ததை பாருங்க!!

மருத்துவம்

இலங்கை மற்றும் இந்தியாவில் யில் பரவலாகக் காணப்படும் முள்ளம்பன்றி இந்தியன் பொகியுபின் (Indian Porcupine) எனப் பொதுவாக அழைக்கப்படும். இவை இஸ்ரரிக் இன்டிகா (Hysterix indica) என்ற இனத்தைச் சேர்ந்தவை. இவை பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்காளதேசம், இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. அதன் தலையும் உடலும் 70 செ.மீ. – 90 செ.மீற்றர் வரை நீளமாக இருக்கும். வாலின் நீளம் 8 செ.மீ. – 10 செ.மீற்றர் மற்றும் 11 கிலோகிராம் முதல் 18 கிலோகிராம் வரை நிறையுடையதாக வளர கூடியவை..

முள்ளம்பன்றியை எ-தி-ரி தா க் க வந்தால் முட்களை எழுப்பி ஒருவிதமான ஒலியை கிளப்பும். அதையும் மீறி துரத்தினால் தான் துரத்தி வரும். இது விலங்குகளை தன் உடலிலுள்ள முட்களால் தாக்குகின்றது. உண்மையில் முள்ளம்பன்றிகள் தம் உடலில் உள்ள முட்களை வீசி எறிவதில்லை. அவை தமது வாலைத் தூக்கி நிலத்தில் அ-டிக்-கு-ம். அந்த வேகத்தில் தான் முட்கள் பறந்து சென்று எதிரி விலங்கின் உடம்பை தைக்கின்றன. எனினும் எதிரி விலங்குகளிடமிருந்து முள்ளம்பன்றிகளை அவற்றின் முட்கள் தான் காக்கின்றன.

இந்திய முள்ளம்பன்றிகளில் கர்ப்ப காலம் 240 நாட்கள் நீடிக்கும். பொதுவாக வருடத்திற்கு ஒரு தடவை 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனப்படுகின்றன. குட்டிகள் பிறக்கும் போது அவற்றின் கண்கள் திறந்தே காணப்படும். அவற்றின் உடல் குட்டையான மென் முட்களால் மூடப்பட்டிருக்கும்.

இந்திய முள்ளம்பன்றிகள் பொதுவாக ஒரே வாழ்க்கைத் துணையோடுதான் சீவிக்கின்றன. இரு பெற்றாரும் தம் குட்டிகளோடு வருடம் பூராவும் ஒரே வளையில் வாழ்வதைக் காணமுடியும்.

முள்ளம்பன்றிகள் விவசாயிகளின் எதிரி என அழைக்கப்படுகின்றது. ஏனெனில் பயிர்களின் வேர்களைத் தோண்டிச் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்குப் பிரச்சினையாக மாறுகின்றன. அத்தோடு, வளைகள் தோண்டுவதன் மூலம் வீட்டுத் தோட்டங்களையும், நில வடிவமைப்புக்களையும் அவை பெரிய அளவில் சேதப்படுத்துகின்றன. இந்த நிலையில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது அந்த வீடியோவில் முள்ளம் பன்றி ஒன்று சாலை ஓரமாக நின்று கொண்டு இருக்க அதனை வேட்டை ஆட சிறுத்தை ஒன்று முயல்கிறது


பின்னர் அந்த சிறுத்தை அந்த முள்ளம் பன்றியை வேட்டை ஆடியதா என்றுதான் அந்த வீடியோ அமைகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *