இன்றைய தினத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருக்கவேண்டிய ராசியினர்கள் யார்?

ஆன்மீகம்

ஜாதகத்தில் ராசி என்றால் என்ன ? லக்கினம் என்றால் என்ன ?
பொதுவாக நாம் ஜோதிடரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது ஜாதகம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது உங்களுடைய லக்கினம் உதாரணமாக மேஷம் என்றும் உங்களுடைய ராசி தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என்பது போன்ற விளக்கங்களை சொல்ல கேள்விப்பட்டிருப்போம் நமக்கு புரியவில்லை என்றாலும் சரி சரி என்று தலையை ஆட்டி வைத்திருப்போம் காரணம் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது திருமணத்தைப் பற்றி அல்லது செய்யும் தொழிலைப் பற்றி வீடு கட்டுவது சம்பந்தமாக போன்ற நம்முடைய காரியங்களிலேயே மிக கவனமாக இருப்போம் எனவே ஜோதிடர் கூறுகின்ற ராசி லக்னம் எல்லாம் சரி சரி என்று கேட்டுக் கொள்வோம்

அப்படியானால் ஜாதகத்தில் ராசி என்பது என்ன லக்கினம் என்பது என்ன என்று ஒன்று தானா அல்லது வேறு வேறு என்பதை இப்பதிவில் காணலாம் நவகிரகங்களில் சந்திரன் கிரகம் ஆகும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார் ராசி சக்கரத்தில் ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாள் இருப்பார் எடுத்துக்காட்டாக மேஷம் ராசியில் சந்திரன் இரண்டேகால் நாள் இருப்பார் பின்னர் ரிஷப ராசிக்கு சென்று அங்கு இரண்டேகால் நாள் இருப்பார் அதன்பின்னர் மிதுனம் ராசிக்கு சென்று அங்கும் இரண்டேகால் நாள் இருப்பார் இவ்வாறாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் ஒவ்வொரு ராசியாக மாறிக் கொண்டே இருப்பார்

ஒரு ஜாதகர் ஜனனம் ஆகும் போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே அந்த ஜாதகருடைய ஜென்ம ராசி எனப்படும் எளிதாக சொல்வது என்றால் உங்கள் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுதான் உங்களின் ஜனன ராசி ஆகும் இந்த ராசிக்கு தான் குரு பெயர்ச்சி பலன்களும் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்களும் பார்க்க வேண்டும் ஏனென்றால் இவை அனைத்தும் கோச்சாரம் என்று சொல்லப்படுகிற கோள்களின் சஞ்சார பலன்கள் ஆகும் எனவே இவற்றை ராசியிலிருந்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்

லக்கினம் என்பது என்ன ?
நமது பூமியில் ஒரு இடத்தை அடையாளம் சொல்வதற்கு நம்மால் கற்பனையாக வரைந்த வைக்கப்பட்டுள்ள கூடுகள்தான் பூமத்திய ரேகை கடக ரேகை மகர ரேகை அட்ச ரேகை தீர்க்க ரேகைகள் இவை அனைத்தையும் கொண்டு தான் பூமியின் ஓரிடத்தை மிகத்துல்லியமாக அடையாளப்படுத்துகிறோம் இதே போன்று நாம் வாழும் இந்த பூமிக்கு மேல் ராசிச் சக்கரமானது கற்பனையாக சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது

ஒரு ஜாதகர் பூமியில் ஜனனம் ஆகும் போது கிழக்கு திசை அடிவானத்தில் எந்த ராசி உதயம் ஆகிறதோ அதுதான் அவருடைய லக்கினம் எனப்படும் லேசாக தலை சுற்றுவது போல் உள்ளது அல்லவா இருந்தாலும் ஜோதிடம் சற்று சிக்கலான விஷயம் தான் கற்பனையான ராசிச் சக்கரமானது மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் இவற்றில் கீழ்திசை அடிவானத்திலிருந்து மேற்கு திசை அடிவானம் வரை ராசிச் சக்கரத்தின் ஆறு ராசிகள் வியாபித்திருக்கும் மேல்திசை அடிவானத்திலிருந்து பூமியின் அடிப்புறம் இருள் பகுதியில் ஆறு ராசிகள் வியாபித்திருக்கும் இவை சுற்றிக்கொண்டே இருக்க கூடிய சக்கரம் ஆகும் எனவே மேலே உள்ள ஆறு ராசிகளும் கீழே செல்வதும் கீழே உள்ள ஆறு ராசிகளும் மேலே வருவதும் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் நடந்து விடும் இதைத்தான் ஒரு நாளுக்கு 60 நாழிகை என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது

இந்த லக்கினத்தை கணிப்பதற்கு நிறைய கணக்கீடுகளும் நாம் கணிக்கும் இடத்திற்கான சூரிய உதயமும் மிக முக்கியமாக தேவைப்படும் இதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்கிறார்கள் ஆனால் நவீன காலங்களில் கணிப்பொறிகள் இந்த வேலையை மிக விரைவாக செய்து முடித்து விடுகின்றன நாம் இந்த கணக்கீடுகளை பற்றி கவலை கொள்ளாமல் மிக எளிமையாக லக்கனம் என்ன என்பதை கண்டு கொள்ளலாம்
முதலில் உங்கள் ஜாதகத்தை கையில் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் பொதுவாக இரண்டு கட்டங்கள் போடப்பட்டிருக்கும் அவற்றில் ஒன்று ராசிச்சக்கரம் என்றும் மற்றொன்று அம்சம் சக்கரம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சம் என்பது நவாம்சம் என்று ஒரு சில ஜாதகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கலாம் இரண்டும் ஒன்று தான் நமக்கு இந்த நவாம்சச் சக்கரம் தேவை இல்லை ராசி சக்கரத்தில் தான் உண்மையான கிரக நிலைகள் வானத்தில் உள்ளது போன்றே இருக்கும் இந்த ராசிச் சக்கரத்தில் “ல” என்று குறிப்பிடப்பட்டு குறுக்கு வாக்கில் ஒரு கோடு போட்டிருப்பார்கள் இதைத்தான் லக்கினம் என்று குறிப்பிடப்படுகிறது


லக்னத்தை கொண்டு பலன் எடுப்பது என்பது ஒரு ஜோதிடருக்கு மிக முக்கியமானதாகும் காரணம் அவர் தற்பொழுது குறிப்பிட்ட அந்த ஜாதகத்திற்கு நடந்து கொண்டிருக்கும் திசை மற்றும் புத்தி கொண்டு பலன்களை கணக்கிடுவதற்கு லக்கினம் மிக அவசியமாகும் பொதுவாக அந்த ஜாதகத்திலேயே எந்த ராசியில் இந்த ஜாதகர் பிறந்து இருக்கிறார் என்பதை குறிப்பிட்டு இருப்பார்கள் இந்த ராசியை வைத்து கோச்சார பலன்களை கண்டு கொள்ளலாம்

லக்கினம் என்று குறிப்பிடப்பட்ட அதே கட்டத்தில் சந்திரனும் இருக்கும் அவர்களுக்கு ராசி லக்கினமும் ஒன்றாகவே இருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக கன்னி லக்னம் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒரு ஜாதகத்தில் அதே கன்னி ராசியில் சந்திரன் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு லக்னமும் ராசியும் கன்னி ராசிதான்
பொதுவாக நாம் பேப்பரில் ராசிபலன்கள் பார்ப்பதற்கோ அல்லது டிவியில் ராசி பலன்கள் கேட்பதற்கு சந்திக்கக்கூடிய ஜென்ம ராசியை மட்டும் கருத்தில் கொண்டால் போதுமானது ஒரு ஜோதிடர் குறிப்பிட்ட ஜாதகர் அதற்கான பலன்களை சொல்லும் பொழுது அவர் இலக்கணத்தைக் கொண்டு பலன்களை எடுத்துக் கொள்வார் அதுபற்றி நாம் ஒன்றும் சிரமப்பட வேண்டியது இல்லை இவ்வாறு ஒரு ஜாதகத்திற்கான ராசியையும் இலக்கணத்தையும் நாமே எளிதில் தெரிந்து கொள்ளலாம் கூடல் நகரத்து ஆடவல்லான் உங்களை ஆசீர்வதிப்பாராக திருச்சிற்றம்பலம்


ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும் தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும்.

அந்த வகையில்,இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே ராசிப்பலனைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *