கடும் கோவக்காரரா இருப்பாரோ…. குட்டிப்பையனின் க்யூட்டான கோபம்! மில்லியன் பேரை சிரிக்க வைத்த வீடியோ!!

காணொளி

பல மாதங்கள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஹேர்கட் செய்யும் அனுஷ்ருத் என்ற குட்டிப்பையனின் அப்பாவித்தனமும் கோபமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சுட்டி பையனின் அழகிய முடியை கட் செய்யும் போது பார்பர் மீது விழுந்தது. இதன் போது சுட்டிப்பையன் செய்யும் சேட்டைகள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. சுட்டிப்பையனின் முதல் வீடியோ பல மீம்களாக உருவாக்கப்பட்டு, குழந்தை அனுஷ்ருத் மற்றும் அவரது அப்பா அனுப் ஆகியோரை ஒரே இரவில் பிரபலமாக்கியது.

அதைவிட அட்டகாசமான மற்றொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி தனது ட்விட்டர் கணக்கில் தனது மகனுக்கு மற்றொரு ஹேர்கட் செய்யப்போவதை பற்றிய ஒரு வீடியோவை அவரின் அப்பா பகிர்ந்துள்ளார்.


இரண்டு நிமிட நீளமான அந்த வீடியோ கிளிப்பில் அனுஷ்ருத் ஒரு சேரில் (Chair) ஒயிட் மற்றும் ப்ளூ கலர் துணியால் சுற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.

மேலும் என் முடியை பார்பர் வெட்டியதால் அவர் முடியை நான் வெட்டுவேன் என்று அந்த குட்டிப்பையன் கண்ணில் கோபத்துடன் கூறுகிறான். கொஞ்ச நேரத்திற்கு பிறகு குழந்தையின் மனநிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு, பார்பருக்கு எங்கே வெட்டவேண்டும் எங்கே கூடாதென்றெல்லாம் கூறினான். மேலும் அதிக முடியை வெட்டினால் நான் வழுக்கை ஆகிவிடுவேன், (“Taklu ho jaunga!” என்று அந்த குட்டிப்பையன் கூச்சலிடுகிறான். இது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *