இந்த 1 பொருளை காகத்திற்கு வைத்தால் தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீரும்!

ஆன்மீகம்

நாம் தினமும் காலை குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கை பற்ற வைத்து பின்னர் கடவுளை வழிபட்டுவிட்டு காகத்திற்கு ஒரு கையளவு உலர் திராட்சையை வைக்க வேண்டும். இப்படி நாம் அவ்வப்போது செய்து வருவதன் மூலம் நம் அனைவரின் அத்தனை பாடுகளுக்கும் தீர்வாக அமையும் . இதை செய்யமுடியாதவர்கள் அதி காலையில் புதிதாக வெள்ளை சோற்றினை வடித்து நாம் சாப்பிடுவதற்கு முன் அதில் எள் சிறிதளவு கலந்து காகத்திற்கு கொடுத்தது காகம் சாப்பிட்டதற்கு பின் நாம் சாப்பிட்டு கொள்ளலாம் . இதனால் நாம் அனுபவித்துவரும் அனைத்தும் நீக்கி நம்மை விட்டு ஓடி சென்று விடும்

காகங்களுக்கு நாம் தினம் உணவு கொடுப்பதன் மூலம் சனிபகவானின் அருள் மட்டுமல்லாது நம் முன்னோர்களின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைத்து விடும், நாம் வாழ்வில் முன்னேற உதவும்.மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.

மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள். காக்கை சனிபகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சிதருமாம். கால்கள் ஊனமுற்ற மாற்று திறநாளிகளுக்கு இயன்ற உதவியைச் செய்வதன் மூலம் சனிபகவானின் மனதை குளிர்விக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *