தி டீ ர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் யார் தெரியுமா? இந்த 3 ராசியும் மிக அ வ தானம் !!

ஆன்மீகம்

சில ராசிக்கு பணவரவு உண்டு….

பிப்ரவரி 2 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று சில ராசிக்கு தி டீ ர் பணவரவு உண்டு. இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அதனால் மிகவும் அவதானமாக இருக்கவும்.அந்த வகையில் இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம்.

மேஷம்
இசை சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்களுடைய ஆதரவினால் இதுவரை தடையாக இருந்துவந்த செயல்கள் நிறைவு பெறும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்துக்கான இலக்கை நிர்ணயிக்க முயற்சி செய்வீர்கள். உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கும், அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பும் இருக்கும்.

ரிஷபம்
தொழிலில் உங்களுடைய முழு திறமையும் வெளிப்படும். உங்களுடைய ஆற்றலால் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். வீடு, மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சின்ன சின்ன தடைகளும் தாமதங்களும் உண்டாகலாம். பொருள் சேர்க்கை போதுமான அளவில் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களுடனும் நண்பர்களுடனும் சிறிது கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களுடைய அதிர்ஷ்டமான எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

மிதுனம்
பொதுக்கூட்டங்கள் மற்றும் பொது வெளிகளில் உங்களுடைய பேச்சு இன்று பாராட்டுக்கள் வந்து குவியும். இதுவரை இருந்து வந்த எல்லா பிரச்னைகளுக்கும் குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவை எடுப்பீர்கள். துன்பங்கள் நீங்கி, நிம்மதி உண்டாகும். புதுவித தொழிற்பயிற்சிகளில் ஈடுபட்டு, சோதனை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கும் இன்று சாதகமான சூழலே காணப்படும். இன்றைக்கு அதிர்ஷ்டம் தரும் திசையாக மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 4ம் அதிர்ஷ்டம் தரும் நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கடகம்
தாய்வழி உறவினர்கள் குறிப்பாக, தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். இந்திரங்கள் சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். நினைத்த காரியத்தை முடிக்க முடியாமல் இழுத்தடிக்க வேண்டியிருக்கும். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக காவியும் இருக்கும்.

சிம்மம்
இன்றைக்கு எந்த காரியத்தை எடுத்தாலும் கொஞ்சம் இழுபறியாகவே போகும். ஆனாலும் இதற்கு முன் நீங்கள் பார்த்த வுலையின் வெற்றியால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடன் தொல்லைகள் உண்டாகும். சரியான நேரத்தில் கடனைத் திருப்பித் தர முடியாததால் பிறரின் மன வருத்தத்துக்கு ஆளாக நேரிடும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

கன்னி
உறவினர்களிடம் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். இன்றைக்கு எதிர்பாராமல் தி டீ ர் செலவுகள் வந்து உங்களுக்கு நெருக்கடியைத் தரும். குடும்ப உறுப்பினர்களின் மீதான அக்கறையால் அவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் தேவையில்லாத மனச்சோர்வு உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் என எவரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளையும் இருக்கும்.

துலாம்
பொது காரியங்களில் ஈடுபடும் நல்ல எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். அதுபோன்று பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. எதிர்காலம் குறித்து புதிய முடிவுகள் எடுக்க நேரிட்டால், பெரியவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். வாகனங்களில் பயணம் செய்யும்போது, க வனமாக இருக்க வேண்டும். சந்திராஷ்டமம் உங்களுக்குத் தொடர்வதால் செய்கிற வேலைகளில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் திசை மேற்கு, அதிர்ஷ்ட எண் 9, அதிர்ஷ்ட நிறம் பச்சை.

விருச்சிகம்
பெரியோர்களின் ஆசியுடன் இன்றைய நாளை தொடங்குவீர்கள். தொழிலில் வெற்றியை உண்டாக்கும் பல புதிய வாய்ப்புகள் வரும்.அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தைவழியில் இருக்கும் சொத்துக்களால் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி, உங்களுக்கு வரவேண்டிய சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக காவியும் இருக்கும்.

தனுசு
பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எ திர்பார்த்த லாபம் கிடைக்கும். மனதில் தேங்கியிருந்த கவலைகளை தூ க் கி எ றி ந் துவி ட்டு மகிழ்ச்சியாக பயணிப்பீர்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமண முயற்சிகள் கைகூடும். வரன்கள் வந்துசேரும். வாகனச் சேர்க்கை ஏற்படும். திறமையின் காரணமாக புதிய பொறுப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்

மகரம்
புதிதாக ஏதேனும் தொழிலில் முதலீடு செய்வதாக இருந்தால் க வ ன மாக இருக்க வேண்டும். கால்நடைகளிடம் கவனமுடன் செயல்பட வேண்டும். சொந்தங்களின் அருமையை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் உண்டாகும் தேவையில்லாத அலைச்சல்களால் வீணான விரயச் செலவுகள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சும் இருக்கும்

கும்பம்
பயணங்களின் மூலம் நினைத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கினில் மாற்றம் உண்டாகும். உடல் சோர்வின் காரணமாக எடுத்த காரியத்தை நிறைவேற்ற கால தாமதமாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய வாக்குத் திறமையால் லாபம் அடைவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்களின் ஆதரவால் நன்மைகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். சிறந்த பேச்சுத் திறமையால் அனுகூலம் உண்டாகும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *