காதில் பூச்சி புகுந்துவிட்டால் இப்படி செய்து பாருங்கள் : மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை !!

விந்தை உலகம்

இப்படி செய்து பாருங்கள்….

காதுக்குள் பூச்சி புகுந்து விட்டால் அது உங்களை நிம்மதியாக இருக்கவிடாது. பெரும்பாலும் இது குழந்தைகளுக்கு தான் அதிகம் நடக்கும். காது என்பது மிகவும் சென்சிடிவான பகுதி அதைபாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.காதுக்குள் பூச்சி புகுந்து விட்டால் இதை செய்து பாருங்கள்.

ஆலிவ் ஆயில்
காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயிலை சில துளிகள் காதிற்குள் விடுங்கள். காதிற்குள் ஆயில் இருக்கும் போது பூச்சியால் காதிற்குள் இருக்க முடியாது எனவே ஆயிலுடன் சேர்ந்து பூச்சியும் வெளியில் வந்துவிடும். இது இருந்தால் ஆயில் வேண்டாம் மிதமான சூடுள்ள எண்ணெய்யை காதிற்குள் விட வேண்டும். மிக சூடான எண்ணெய்யை ஊற்ற கூடாது. பூச்சி புகுந்தால் மட்டும் தான் காதிற்குள் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

ஆல்கஹால்
காதிற்குள் பூச்சி புகுந்தால் ஆல்கஹாலை பஞ்சில் தொட்டு காதின் வெளிப்பகுதில் வைக்கலாம். இவ்வாறு செய்வதால் காதில் உள்ள பூச்சி வெளியேறிவிடும். சில துளிகள் ஆல்கஹாலை காதிற்குள் விடலாம்.

பட்ஸ்..!
காதிற்குள் பட்ஸ் அல்லது வேறு சில பொருட்களை விட கூடாது. அவ்வாறு செய்தால் காதிற்குள் உள்ள பூச்சி மேலும் உள்ளே சென்று விடும். மேலும் நீங்கள் காதிற்குள் விடும் பொருள் காதை சேதப்படுத்தலாம்.

விரலை விட வேண்டாம்
காதிற்குள் விரலை கூட விட வேண்டாம். இவ்வாறு விரலை விட்டால் காது அதிகமாக வலிக்க தொடங்கிவிடும். தீக்குச்சிகளும் வேண்டாம் காதிற்குள் தீக்குச்சிகளை விடுவதால் காதில் இருக்கும் வேக்ஸ்களை இது உள்ளே தள்ளிவிடும். ஒருவேளை பூச்சி வெளியே வந்தாலும் கூட, தீக்குச்சியால் இன்பெக்சன் ஆகிவிடும். அதனால் காது கேளாமல் கூட போகலாம். மேற்கண்ட எதுவும் உங்களுக்கு பலன் தரவில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று தீர்வு காணுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *