மாஸ்க்கை கழட்டாமல் எப்படி சாப்பிடுவது?… பிரபல உணவகத்தின் அசத்தல் ஐடியா

காணொளி

இன்றைய காலத்தில் காரோனா நிமித்தமாக பல பிரச்சனைகளுக்கு நாம் முகம் கொடுத்து வருகின்றோம். குறிப்பாக சொல்லதென்றால் தற்போதைய சூழலில் மாஸ்க் இல்லாமல் யாரும் வெளியில் செல்ல முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. அது நோய் தொற்றிலிருந்து எம்மை நாமே பாத்து காத்து கொள்ளும் முறையாக காணப்படுதல் தொடர்ச்சியாக இந்த மாஸ்க் ஐ பயன்படுத்துவதில் பல சிக்கல்களை மக்கள் எதிர் நோக்கியுள்ளார்கள். எங்கு சென்றாலும் மாக்ஸ் அனிந்து செல்ல வேண்டும் என்பதால் தங்களின் அன்றாட தேவைகளில் சிலவற்றை செய்வதில் மக்கள் சிரமத்தை எதிர் கொண்டு தான் உள்ளார்கள். அதாவது வெளியிடங்களில் செல்லும் பொது குறிப்பாக உணவகங்களுக்கு செல்லும் போதும் சாப்பாடை உண்ணும் போதும் இந்த பிரச்னைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில் உணவருந்தும் கடையில் இலவசமாக கொரோனா முன்னெச்சரிக்கைக்காக ஜிப் முகக்கவசம் அளிக்கப்பட்டு வருவது பரபரப்பாக பேச்சுப் பொருளாக இருந்தது. மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் இயங்கும் ஒரு ரெஸ்டாரண்ட்டில் உணவருந்த வரும் வாடிக்கையாளருக்கு ஜிப் வைத்த முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த புதுவகை முகக்கவசம் வாடிக்கையாளரின் நலன் கருதி சாப்பிடும் போதும் முகக்கவசம் அணிந்திருக்குமாறு வாய் பகுதியில் மட்டும் ஜிப் வைத்து தைக்கப்பட்டுள்ளது என அந்த ரெஸ்டாரண்ட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் மேலும் இது வாடிக்கையாளரின் விருப்பத்தை சார்ந்ததேத்தாகும் எனவும், கட்டாயமாக கொடுப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த விஏஓ காட்சி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *