தமிழ் மொழி என்பது இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக பழமையான மொழி ஆகும். தமிழ்மொழி நமது தாய்மொழி. பல்வேறு சிறப்புக்களைக்கொண்ட பண்பட்ட மொழி. உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மூத்த மொழி தமிழேதான் என்று பலநாட்டு ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்துள்ளார்கள். கணனித் தொடர்புகளுக்கும் மிகவும் இசைவான, இலகுவான மொழியும் தமிழே என்று இன்றைய அறிஞர்கள் இயம்புகின்றார்கள். இவ்வாறு நமது தாய்மொழி பழமைக்குப் பழமையாக இருக்கிறது. புதுமைக்குப் புதமையாகவும் இருக்கிறது. என்றும் இளமையாக இருக்கிறது. அதனால் நமக்குப் பெருமையாக இருக்கிறது.

இன்றைக்கு எங்கெங்கு மனிதர்கள் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்றுகூடச் சொல்லலாம். அந்த அளவிற்கு ஒன்பது கோடித் தமிழ் மக்கள் உலகெங்கும் பரந்து எண்பதுக்கு மேற்பட்ட நாடுகளிலே வாழ்கிறார்கள். தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தாம் வாழுகின்ற இடங்களிலெல்லாம் தமிழ்மொழியை வளர்த்தார்கள். பண்பாட்டைப் பேணினார்கள்.

இனப்பற்றை இழக்காமல் வாழ்ந்தார்கள். ஆனால் நாளாக நாளாக எல்லாமே நலிவடைந்து போகின்றன. வாழுகின்ற நாடுகளில் வழங்குகின்ற மொழிகளிலே படிக்கவும், எழுதவும், பேசவும் வேண்டியது அவசியமாகிவிட்டது. அதனால் அந்நிய நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்துவிட்டது. அதனால் தாய்மொழி ஆர்வம் குறைந்துவிட்டது.

ஆனால் வெள்ளைக்கார தாத்தா ஒருவர் தமிழில் பாடி அசத்தும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. அவரின் தமிழ் உச்சரிப்புக்கும், திறமைக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்கள் அடிமையாகியுள்ளனர். தமிழர்களின் மொழி மீதும், தமிழ் மீதும் வெளிநாட்டவர்கள் இன்று கொண்ட பற்றுக்கு இந்த காணொளியும் எடுத்துகாட்டாகும்.

இதேவேளை, உலகம் மொழி அறியாது, உறவு அறியாது சுழன்று கொண்டிருந்த போது வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து. முத்தமிழ் சங்கம் உருவாக்கி சிறந்து விளங்கியவன் தமிழன் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்
https://www.facebook.com/watch/?v=379210929280630