கோவிலில் நிகழ்ந்த…..
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தனக்கு மிஞ்சிய சக்தி ஒன்று இவ்வுலகில் இருப்பதாக கருதுகின்றனர். சிலர், இறைவன் இல்லை அனைத்தும் இயற்கையாகவே நிகழ்கிறது என்றும், இரைவன் இருப்பதாக கூறும் சிலர் இறைவனால் தான் அனைத்தும் நிகழ்கிறது என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில், சென்னை தாம்பரம் அருகேயுள்ள சாய்பாபா கோவிலில் பாபா சிலை இருக்கும் கருவறையில் உள்ள சிசி டிவி கேமராவில் பதிவாகியுள்ள ஒரு காட்சி, சாய் பாபா அங்கே இருப்பதற்கான சாட்சியாக உள்ளது.
அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை காணும் போது, அதில் சாய் பாபாவின் சிலைக்கு பூஜையின் போது சாற்றப்பட்ட பூமாலையை அவர் கழட்டி கிழே தள்ளுவது போலவும்,
அப்படி விழுந்த அந்த மாலை அவர் காலில் மாட்டும் போது, அவர் தன் காலால் அம்மாலையை தள்ளியதும்,
அது அவர் அமர்ந்திருக்கும் பீடத்தை சுற்றி அழகாக அலங்கரிப்பது போன்ற காட்சி உள்ளது. இக்காட்சியைக் கண்ட சாயியின் பக்தர்கள் அவரின் அருளாற்றல் இக்கோவிலில் இருப்பதை எண்ணி மகிழ்கின்றனர்.
இந்த அ தி சய த் தைப் பற்றி கேள்விப்பட்டு மேலும் பலர் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.