2021 இல் நாளை சக்திவாய்ந்த அமாவாசை! இந்த கருப்பு உணவு பொருளை தானம் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா !!

ஆன்மீகம்

சக்திவாய்ந்த அமாவாசை நாளில்….

இந்து சமய நாட்காட்டியின் படி, மவுனி அமாவாசை முக்கியமான ஒன்றாகவும், புனிதம் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. அமாவாசை என்பது சுக்ல பட்சம் அல்லது 15 நாள் ஒளியின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. நிலா வராத அன்று அமாவாசை அல்லது புது நிலவு நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்து சமயத்தில் தை மாதம் ஒரு புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது.

ஏனெனில் இந்த மாதத்திலிருந்து தான் துவப்பரா யுகா தொடங்குகிறது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவாி மாதம் 11 அன்று மவுனி அமாவாசை வருகிறது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவாி மாதம் 11 அன்று அதிகாலை 01.08 மணிக்கு மவுனி அமாவாசை திதி தொடங்கி, பிப்ரவாி 12 அன்று அதிகாலை 00.35 மணி அளவில் முடிவடைகிறது.

மவுனி அமாவாசையின் முக்கியத்துவம் மகா சிவராத்திாி வருவதற்கு முன்பாக வரும் ஆண்டின் இறுதி அமாவாசை மவுனி அமாவாசை ஆகும். மவுனி அமாவாசை அன்று ஆறுகளில் மூழ்கி குளிப்பது, அதிலும் குறிப்பாக கங்கை நதியில் குளிப்பது என்பது ஒரு புனிதமான செயலாகக் கருதப்படுகிறது. ஏனெனில் மவுனி அமாவாசை அன்று கங்கை நதியின் நீா் தேனாக மாறுவதாக நம்பப்படுகிறது.

சடங்குகள்
மவுனி அமாவாசை அன்று ஒரு சில சடங்குகளை செய்ய வேண்டும் என்று பாிந்துரைக்கப்படுகிறது. அதன்படி ஒருவா் தனது சக்திக்குத் தகுந்தவாறு எளியவா்கள் மற்றும் இல்லாதவா்களுக்கு தான தர்மம் செய்ய வேண்டும். குறிப்பாக எள், கருப்பு ஆடைகள், எண்ணெய், போா்வை, காலணிகள் மற்றும் வெம்மை தரக்கூடிய ஆடைகள் போன்றவற்றை தானமாகத் தரலாம் என்று பாிந்துரைக்கப்படுகிறது.

மவுனி அமாவாசை அன்று சூாியனும் சந்திரனும் மகர ராசியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் மகர ராசியில் சூாியன் ஒரு மாதம் அளவும், சந்திரன் 2 நாட்களுக்கும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *