மீன் சாப்பிடுவதால் உடலுக்கு….
மீன் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்ப்போம். தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் ர த் த க்கு ழா ய் களில் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தலாம். இது இதயத்திற்கு இதமானது.
மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும். மீனில் இருக்கும் வைட்டமின் டி எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவதொரு மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்துவிடலாம். மீன் சாப்பிடுவது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.
மனச்சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம். மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி போன்றவை மனநல பிரச்சினைகளை தடுக்க உதவும். மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைப்பதோடு அவை சேருவதையும் தடுக்கும். மு ட க் கு வா தத் தில் ஏற்படும் வீ க் க ம் மற்றும் வலியை குறைப்பதற்கு மீன் உணவுகளை சாப்பிட வேண்டும்.
மீன் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூ க் க த் தை வரவழைக்கும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவும். தினமும் மீன் சாப்பிடுகிறவர்கள் அளவுக்கு அதிகமாக அதனை சாப்பிடக்கூடாது.