வெண்கலப் பாத்திரங்களில் புளிப்பான உணவுகளை சமைக்கலாமா? இனி இந்த பாத்திரத்தில் யாரும் சமைக்காதீர்கள் !!

விந்தை உலகம்

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் …

நமது குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்தை வடிவமைப்பதில் குடல் முக்கிய பங்கை வகிக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தொிவிக்கின்றன. நாம் சாப்பிடும் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் குடல் வழியாகவே சொிமானம் அடைகின்றன. நம்மை நலமாக வைத்திருக்க குடல் பலவிதமான பணிகளைச் செய்கிறது. எனினும் நாம் சமைக்கும் உணவுகளும் மற்றும் நாம் உட்கொள்ளும் ஊட்டச்சத்துகளும் நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

அலுமினியப் பாத்திரங்களில் சமையல் செய்தால் அவற்றில் நச்சுகள் கலந்திருக்கும். அவை நமது வளா்சிதை மாற்றத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தொிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிப்பாக பிபிஎ-வை (BPA bis-phenol) சமைப்பதற்குப் பயன்படுத்தினால் ஹாா்மோன் குறைபாடுகள், சா்க்கரை நோய், சினைப்பை நோய்க்குறி (PCOD), மூட்டு வீக்கம் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
டெஃப்லான் (Teflon) முலாம் பூசப்பட்ட பாத்திரங்களை சமைப்பதற்குப் பயன்படுத்தினால், ஹாா்மோன் குறைபாடுகள் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆகவே பழங்காலத்தில் நமது முன்னோா்கள் எவ்வாறு வெண்கலம் மற்றும் வார்ப்பு இரும்பினால் செய்யப்பட்ட பத்திரங்களில் சமைத்தது வந்தாா்களோ, அதுபோல் நாமும் வெண்கலம் மற்றும் வாா்ப்பு இரும்பில் செய்யப்பட்ட பாத்திரங்களை சமைப்பதற்குப் பயன்படுத்தினால் அவை நமக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். நாம் இப்போது வாா்ப்பு இரும்பினால் செய்யப்பட்ட தோசைக் கல்லை சப்பாத்தி சு டு வ த ற்கு பயன்படுத்துகிறோம். சில்வா் குவளை அல்லது செம்பு குவளைகளில் தண்ணீா் அல்லது பால் குடிக்கிறோம். செம்பு அல்லது வெண்கலப் பாத்திரங்களில் உணவுகளை சமைக்கிறோம் மற்றும் முறுக்கு செய்வதற்கு பித்தளை அல்லது மரத்தாலான முறுக்குக் குழலைப் பயன்படுத்துகிறோம்.

ஆகவே இப்போது நமது நவீன சமயலறைகளில் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்கள் உலா வருகின்றன என்பதில் ஐ ய மில்லை. வெண்கலப் பாத்திரங்களில் புளிப்பான உணவுகளை சமைக்கலாமா? எலுமிச்சை, வினிகா், பால், கொக்கும், புளி, தக்காளி போன்ற புளிப்பான உணவுகளை வெண்கலப் பாத்திரங்களில் சமைக்கலாம். பொதுவாக தாமிரம் மற்றும் பித்தளைப் பாத்திரங்களில் புளிப்பான உணவுகளை சமைத்தால் அவை உடனடியாக எ திா் வி னை ஆற்றும். ஆனால் வெண்கலம் என்பது தாமிரமும் ஈயமும் கலந்த கலவையாக இருப்பதால், அவை புளிப்பான உணவுகளில் எதிா்வினை ஆற்றுவதில்லை.

அதனால் புளிப்பான உணவுகளை வெண்கலப் பாத்திரங்களில் நன்றாக சமைக்கலாம். மேலும் வெண்கலப் பாத்திரங்கள் உயா் வெப்பத்தை வைத்திருக்கும் சக்தியைக் கொண்டிருப்பதால், அவை உணவை நீண்ட நேரம் வெப்பமாக வைத்திருக்கும். அதோடு வெண்கலப் பாத்திரங்களில் மெதுவாக சமைக்க முடியும். அமிலத் தன்மை அதிகம் உள்ள உணவுகளை மிகப் பொிய பாத்திரங்களில் சமைக்கும் போது அந்த பாத்திரங்களை சுத்தமான ஈயத்தால் செய்யப்பட்ட மூடிகள் கொண்டு மூடுவது நல்லது.

வெண்கலம் மற்றும் வாா்ப்பு இரும்பு பாத்திரங்களால் கிடைக்கும் நன்மைகள் வெண்கலப் பாத்திரங்கள் உணவை சுத்தப்படுத்துகின்றன. நமது குடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்து சொிமானத்திற்கு துணை செய்கின்றன.
அதோடு நமது சருமத்தை மெருகேற்றி, நம்முடைய அழுத்தத்தைக் குறைக்கின்றன. வெண்கலப் பாத்திரத்தில் 8 மணிநேரம் வைக்கப்பட்ட தண்ணீரை குடித்தால் உடலில் உள்ள எல்லா பிரச்சனைகளும் நீங்கும் என்று ஆயுா்வேத மருத்துவம் கூறுகிறது. வெண்கலப் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் குறைகிறது. ஞாபக சக்தி அதிகாிக்கிறது மற்றும் தைராய்டு சுரப்பியை சமச்சீராக வைத்திருக்கிறது.

தாமிரப் பாத்திரங்கள் நமது சருமத்திற்கு பளபளப்பைத் தருகிறது. அதோடு நமது உடலில் உற்பத்தியாகும் கருமை நிறமியை அதிகாிக்கிறது. கொலாஜென் என்ற புரோட்டீன் உற்பத்தியாகுவதற்கு உதவி செய்கிறது.
அதனால் தாமிர பாத்திரங்களில் சமையல் செய்வது அல்லது அந்த பாத்திரங்களில் தண்ணீா் அருந்துவது நமது சருமத்திற்கு பளபளப்பைத் தரும். நமது தலைமுடியை மென்மையாக வைக்கும். தாமிரப் பாத்திரங்களை அ டி க் கடி முறையாகக் கழுவ வேண்டும். வார்ப்பு இரும்புப் பாத்திரங்களில் சமைத்தால் நமக்கு இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும். அதோடு வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் சமைக்கும் போது, ஒரு மிகச்சிறிய அளவிலான இரும்பு உணவோடு கலக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *