உங்களது ராசி என்ன?… இந்த ராசிக்காரங்க காதல் க ண் டி ப்பா ஜெயிக்குமாம் !!

ஆன்மீகம்

காதல் ராசி சொல்லும் ரகசியம்…..

காதல் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் வந்து விடாது. அது வர வேண்டிய நேரத்தில் வந்தே தீரும் அந்த காதல் வரும் போது அதை ரசித்து அனுபவிப்பவர்கள் மட்டுமே வாழ்க்கை முழுவதும் ஜெயித்துக்கொண்டிருப்பார்கள். இம்மாதிரியான டயலாக்கினை படத்தில் அதிகமாக அவதானித்திருந்தாலும், பிப்ரவரி மாதம் 14ம் திகதி காதலர் தினத்தினை கொண்டாட் காதலர்கள் தயாராகவே இருப்பார்கள்.

காதல் தோன்றுவதற்கு மனம் முக்கிய பங்குவகிக்கிறது. மனதின் காரகர், உடல் காரகர், சஞ்சலத்தை தருபவர் சந்திரன். குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் ஜெயிக்குமா? பாதியிலேயே விலகி பிரியுமா என்பதை தீர்மானிக்கின்றன. இங்கு உங்களது ராசி நிமித்தம் காதல் கைகூடுமா? அல்லது தோல்வியில் முடியுமா? என்பதைக் காணலாம்.

ஜென்ம பந்தம்
ஒருவருடன் தி டீ ரெ ன காதல் வந்து விடாது. பூர்வ ஜென்ம பந்தம் இருந்தால்தான் அவருடன் தொடர்பு ஏற்படும். காதல் என்ற பாக்கியம் கிடைக்க ஒன்பதாம் பாவம் எனப்படும் பாக்ய ஸ்தானத்துடனும் தொடர்பு எற்பட வேண்டும். ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் அதிபதியும் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் அதிபதியும் இணைந்திருப்பது காதலை ஏற்படுத்தும்.

கை கூடி வரும் காதல்
ஜாதகத்தில் ஏழாம் அதிபதி ஐந்தாம் இடத்தில் இருப்பது அல்லது ஏழாம் அதிபதிக்கும் ஐந்தாம் அதிபதி பார்வை பெறுவது அல்லது ஏழாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ஐந்தாம் அதிபதி இருப்பது, ஐந்தாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ஏழாம் அதிபதி இருப்பது போன்ற அமைப்புகளால் காதல் திருமணம் அமையும். ஒன்பதாம் அதிபதிக்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் ஐந்தாம் அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டால் காதல் கை கூடும்.

காதல் மலரும் காலம்
சுக்கிரன் செவ்வாய் 5பாவகத்துடன் தொடர்பு ஏற்பட்டால் காதல் கனியும். ஏழாம் அதிபதியுடன் செவ்வாய், சுக்கிரன் தொடர்பு ஏற்பட்டால் காதல் திருமணம் அமையும். களத்திரக்காரனாகிய சுக்கிரன், ஏழாம் அதிபதிகளை சனி பார்த்தால்,சுக்கிரன், சனி ஏழாம் இணைந்திருந்தால் காதல் திருமணம் நடைபெறும்.

சுக்கிரன் செவ்வாய்
லக்கினத்திற்கு 1 5 9ல் சுக்கிரன் இருப்பதும். சந்திரன், சுக்கிரன் இணைந்து இருந்தாலும் காதல் திருமணம் நடைபெறும். பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் உள்ள ராசியும், ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் உள்ள ராசியும் ஒரே ராசியானால் கண்டதும் காதல் ஏற்படும்.

காதல் ராசிக்காரர்கள்
காதலுக்கான ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும். துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும் என்கிறது காதல் ஜோதிடம். பொதுவாக எந்த ராசிகளுக்கும் 5 மற்றும் 9ஆம் ராசியாகி அமைபவருடன், காதல் ஏற்படும். ஒரு ராசிக்கு ஏழாவது ராசிக்காரருடன் காதல் மலர வாய்ப்புண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *