ஏன் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்ததுண்டா!!

காணொளி

தற்போதைக்கு உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு அதிவேகமாக செல்ல நமக்கு இருக்கும் ஒரே வழி விமானம் தான். உலகில் பெரியளவில் வர்த்தகம் செய்யும் போக்குவரத்து துறையும் விமான துறை தான். வாழ்நாளில் ஒருமுறையாவது கப்பலில் சென்றுவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் விட, விமானத்தில் பயணித்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் தான் அதிகம். ஆகாயத்தில் பறக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. சிறு வயதில் இருந்தே விமானத்தின் மீது பேரார்வமும், அது வானில் பறக்கும் போதெல்லாம் அன்னாந்து பார்த்து வியக்கும் குணமும் கொண்ட நாம், என்றாவது அது ஏன் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என யோசித்திருக்க மாட்டோம்.

விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது? வேறு கலர்ல இருந்தா அதோ கதி  தான்.. என்ன காரணம்? - TopTamilNews

அதற்கான காரணம் இது தான்-வெள்ளையை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களும் நாள்பட மற்றும் அதிகமாக வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகம் பட்டால் சீக்கிரம் மங்கிவிடும். ஆனால், வெள்ளை அப்படி மங்காது. மற்ற நிறங்கள் சீக்கிரமாக வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை.

அதிகமான விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன? - Plane Color In White  - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip |  Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site |

இதனால், அதிகம் சூடாகும் வாய்ப்புகள் உள்ளன. வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் விமானம் அதிகமாக சூடாகாது.

விமானங்கள் வெள்ளையாக இருக்க என்ன காரணம்: உங்களுக்கு தெரியுமா? - Lankasri  News

வானில் பறக்கும் போதும், நிலத்திலும் இயல்பாக, எளிதாக பார்க்கக்கூடிய நிலை வெள்ளை நிறத்திற்கு இருக்கிறது. இதனாலும் வெள்ளை நிறம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. விமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பு அதிகம் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது.

வெள்ளை நிறத்தில் ஏன் விமானங்கள் இருக்கின்றன என எப்பவாவது  யோசிச்சிறிக்கீங்களா? : Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs

பெரும்பாலான விமானங்கள், விமான கம்பெனிகளால் சொந்தமாக வாங்கப்படுவது இல்லை. விமான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு தான் வாங்குகின்றனர். வெள்ளை நிறம் பயன்படுத்துவதால், லோகோவை மற்றும் மாற்றினால் போதுமானது எனவும் சிலர் கூறுகின்றனர்.

விமானம் பற்றி பலரும் அறியாத உண்மைகள் - Lifie.lk Tamil | வாழ்க்கைக்கு....

விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும். இதுபோல பல காரணங்கள் விமானம் வெள்ளை நிறத்திலேயே இயக்கப்படுவதற்கு கூறப்படுகின்றன.

வெள்ளை நிறத்தில் ஏன் விமானங்கள் இருக்கின்றன என எப்பவாவது  யோசிச்சிறிக்கீங்களா? : Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *