யாரை சனி பகவான் ஆட்டிப்படைக்க போகிறார் தெரியுமா? இந்த 6 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் !!

ஆன்மீகம்

இன்றைய ராசிபலனில் …..

மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு யோகமும், அதிர்ஷ்டமும் தேடி வரும் என்று பார்க்கலாம். அதே நேரத்தில்
இன்று யாரையெல்லாம் சனி பகவான் ஆட்டிப்படைக்க போகிறார் தெரியுமா? இந்த 6 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, மாசி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தலைமைப்பதவி தேடி வரும் வாய்ப்பு இருந்தும் சில தடைகள் வரும். பிறரது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்கவும். ஏழாம் வீட்டில் உள்ள செவ்வாய் எட்டாம் வீட்டில் சென்று ராகு உடன் இணைகிறார். நான்காம் வீட்டில் குரு, சனி ஐந்தாம் வீட்டில் புதன், சுக்கிரன் சூரியன் இணைந்திருக்கின்றனர்.

2ஆம் இடத்தில் உள்ள குடும்ப கேது சில குழப்பத்தை தருவதால் சிக்கல்கள் நீங்கும். சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். ராசி அதிபதி சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பிள்ளைகள் மூலம் நன்மைகள் நடைபெறும். அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குருவின் பார்வையால் உங்கள் ராசிக்கு வேலை பிரச்சினைகள் நீங்கும். வெளிநாடுகளில் இருந்து வேலை வாய்ப்புகள் வரும். தி.டீ.ர் தன லாபம் வரும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்கவும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தினருடன் பேசும் போதும் கவனம் தேவை. கணவன் மனைவி பிரச்சினை வரலாம் பேச்சில் கவனம் தேவை.

வேலை விசயமாக வெளியூரில் வசிப்பவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டாம். திருமண சுப காரியம் தொடர்பாக பேசினால் உறவுகளுக்குள் பேசுவது நல்லது. ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். தாய் வழி உறவுகளிடம் வாக்குவாதம் வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். ஜாமீன் கையெழுத்து இட்டு எதிலும் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

இந்த மாதம் எல்லா வகையிலும் ஜெயித்து காட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடவும். வேலைச்சுமை இருக்கும் கவனம் தேவை. மூட்டுப்பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. கர்ப்பிணி பெண்கள் கவனம் தேவை. கர்ப்ப ரட்சாம்பிகையை படிக்கவும். மன அழுத்தம் குறைய புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, சூரியன் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ராசிக்கு ஆறாம் வீட்டில் உள்ள செவ்வாய் ஏழாம் வீட்டிற்கு சென்று ராகு உடன் நகர்கிறார். சனி, குரு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கின்றனர். புதிய முயற்சிகள் இந்த மாதம் பலிதமாகும். ஆட்சி பெற்ற சனிபகவானும், நீசம் பெற்ற குருவும் இணைந்து நீச பங்க ராஜ யோக பலனை தருகின்றனர். வேலை தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவி யோகம் தேடி வரும்.

செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியனால் பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உண்டான காலகட்டம் இது தி.டீ.ர் அதிர்ஷ்டம் வரும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். வெற்றிகள் தேடி வரும். ராசியில் உள்ள கேதுவும் ஏழாம் வீட்டில் உள்ள ராகுவும் குடும்பத்தில் சில சிக்கல்களைத் தருவார்கள். செவ்வாய் ஏழாம் வீட்டிற்கு சென்று ராகு உடன் இணைவதால் அலைச்சல் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. தி.டீ.ர் விரைய செலவுகள் வரலாம். அதே நேரத்தில் குருவின் பார்வை ஏழாம் வீட்டில் உள்ள ராகு, செவ்வாயின் மீது விழுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இழந்த சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

தி.டீ.ர் திருமண யோகம் தேடி வரும். சிறு தடைகளுக்குப் பிறகு நிறைவேறும். உங்கள் ஆசைகள் நிறைவேறும். வீடு கட்டலாம், வீடுகளை பராமரிப்பு செய்யலாம். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சகோதரர்களுடன் இருந்த ச.ண்.டை. சச்சரவுகள் நீங்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறையும் கவனமாகவும் இருக்கவும். கடன் பிரச்சினை தீரும் அளவிற்கு வருமானம் வரும். உங்களின் புத்துணர்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு யோகமான மாதம் என்றாலும் பேச்சில் நிதானம் தேவை. இந்த மாதம் முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாகும். உற்சாகமான மாதமாகும். இந்த மாதம் பா.தி.ப்.பு.க.ள் நீங்கி நன்மைகள் நடைபெற கால பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு
சூரியன் இந்த மாதம் உங்க ராசிக்கு மூன்றாவது வீட்டில் சஞ்சரிப்பதால் யோகங்கள் அதிகரிக்கும் பணப்புழக்கம் அதிகரிக்கும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். செவ்வாய் ஆறாவது வீட்டில் உள்ள ராகு உடன் இணைவதால் பூர்வீக சொத்து பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். நிறைய பேர் வீடு மாறுவீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள் வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள் அதன் மூலம் நிறைய வருமானம் வரும். பணம் விசயமாக யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து இட்டு யாருக்கும் பணம் கடன் வாங்கி கொடுக்க வேண்டாம்.

மனதில் இருக்கும் பாரங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் சலுகைகள் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். இந்த மாதம் உங்களின் தன்னம்பிக்கை தைரியம் கூடும். புற்றுடன் உள்ள அம்மன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடவும் நன்மைகள் நடைபெறும்.

மகரம்
சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிற்குள் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். பொறுமை தேவை. கண் பிரச்சினை வரலாம். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருக்கவும். செவ்வாய் நான்காம் வீட்டில் உள்ள செவ்வாய் ஐந்தாம் வீட்டிற்கு சென்று ராகு உடன் இணைகிறார். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவர்களின் நட்பு வட்டத்தையும் கண்காணிக்கவும். சுக்கிரன், புதன் இரண்டாவது வீட்டில் பயணம் செய்வதால் கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். பண வருமானமும் அதிகரிக்கும்.

பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடந்த மாதங்களில் ஏற்பட்டிருந்த மன அழுத்தம் மன நிம்மதி பிறக்கும். மாணவ மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி நல்ல பெயர் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும் சந்தோஷமும் மன நிம்மதியும் உண்டாகும். உங்களுக்கு பா.தி.ப்.பு.கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்க திங்கட்கிழமைகளில் ஏழுமலையானை தரிசனம் செய்ய நன்மைகள் நடைபெறும்.

கும்பம்
மாசி மாதம் கும்பம் மாதம் உங்கள் ராசிக்குள் சூரியன் இந்த மாதம் முழுவதும் பயணம் செய்வதால் இதுநாள் வரை இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். விரைய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன், புதன் உங்கள் ராசிக்குள் வந்து நுழைவதால் பணப்புழக்கமும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். கணவரிடம் இருந்து தி.டீ.ர் பரிசுப்பொருட்கள் கிடைக்கும்.

வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். செவ்வாய் பகவான் நான்காம் வீட்டிற்கு செல்வதால் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருக்கவும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வீடு மனை வாங்குவது விசயமாக செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பழைய உறவுகள் மூலம் முன்னேற்றம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கெடுப்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். வெள்ளிக்கிழமையன்று காமாட்சி அம்மனை வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம்
சூரியன் இந்த மாதம் முழுவதும் 12ஆம் வீட்டிற்கு வருகிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் வருமானம் பெருகும். செவ்வாய் மூன்றாவது வீட்டில் பயணம் செய்வதால் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சுக்கிரன் புதன் சாதகமாக இருப்பதால் வீடு பராமரிப்பு செய்வீர்கள். சிலர் புது வீடு வாங்க முன் பணம் கொடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த ச.ண்.டை. சச்சரவுகள் நீங்கி நெருக்கம் கூடும்.

பிள்ளைகளின் திருமணம் விசயமாக பேசலாம். பிள்ளைகளால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தி.டீ.ர் பண வரவு வரும். பங்குச்சந்தைகளில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் வரும். வீடு கட்டுவதற்கு வங்கியில் லோன் கிடைக்கும். இந்த மாதம் உங்களுக்கு வெற்றிகளும் லாபமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. ஞாயிறு கிழமை ராகு காலத்தில் யோக நரசிம்மரை வழிபட நன்மைகள் நடைபெறும் யோகங்கள் அதிகம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *