உங்களுடைய பூஜை அறையில் இப்படி நாணயங்களை வைப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா !!

ஆன்மீகம்

பணம் பல வழிகளிலும் வந்து ……

சில்லறைகளை கண்ட இடத்தில் இட்டு வைப்பது மகாலட்சுமி கடாட்சத்தை சீர்குலைக்கும்.
குபேரர் மட்டுமல்ல, நாணயங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. குபேரனுக்கு ஐந்து ரூபாய் நாணயங்களை அர்ச்சனை செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

நாணயங்களில் நாராயணரும், லக்ஷ்மி தேவியும் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் குபேரருக்கு நாணய அர்ச்சனை செய்யப்படுகிறது. எப்பொழுதும் வீட்டில் சில்லரை நாணயங்களை ஆங்காங்கே இட்டு வைப்பது என்பது கூடாத விஷயம். கோவில்களுக்குச் செல்ல உண்டியல்களில் நாணயத்தை சேகரித்து வரலாம். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை சேமிப்பதன் மூலம் அந்த வீட்டில் வருமானம் அதிகரிக்கும்.

பணம் பல வழிகளிலும் வந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதை தவிர வீட்டில் நாணயங்கள் அதிகமாக இருப்பது நல்லதல்ல. குழந்தைகளுக்கு நாணயங்களை சேகரிக்க கற்றுக் கொடுக்கலாம். இப்போது புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயமும் இருப்பதால் அதையும் சேர்த்து இடுங்கள் தவறில்லை.

அது போல் கல் உப்பில் 5 ரூபாய் நாணயத்தை இட்டு வைப்பது பண வரவை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. பூஜைக்கு தனியாக நாணயங்களை ஒரே மாதிரியாக சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். வெள்ளியில் சுக்கிரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. நாணயத்தை வைத்து இந்த ஒரு விஷயத்தை செய்வதன் மூலம் பண வரவு அதிகரிக்க செய்யலாம்.

வெள்ளி பொருட்களுக்கும், சுக்கிரனுக்கும் தொடர்பு உண்டு. பூஜை அறையில் வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை இட்டு வைக்கலாம். இப்படி நாணயங்களை வெள்ளிக் கிண்ணத்தில் வைத்து பூஜை அறையில் வைக்கும் பொழுது அதனுடைய அதிர்ஷ்டமே தனி தான். சிறிய வெள்ளி கிண்ணம் ஆக இருந்தாலும் போதும்! அதில் நாணயங்களை நிரப்பி வைத்து, பூஜை அறையில் வடக்கு திசையில் வைத்து விட வேண்டும். அந்த நாணயங்களுடன் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தையும், ஒரே ஒரு ஏலக்காயையும் இட்டு வையுங்கள்.

செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளை தவிர்த்து மற்ற கிழமைகளில் அதிலிருக்கும் நாணயங்களை எடுத்து செலவு செய்யலாம். மீண்டும் புதிய நாணயங்களை சேர்த்துக் கொண்டே வரலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் மட்டும் அதில் இருக்கும் நாணயங்களை எடுத்து விடாதீர்கள். வெள்ளி மோதிரம் அணியும் பெண்களுக்கு தடையில்லாத பணவரவும், அதிர்ஷ்ட யோகம் வந்து சேர்வதாக சில ஜோதிட குறிப்புகள் குறிப்பிடுகிறது. பெண்கள் விரலில் வெள்ளி மோதிரம் அணிவது அதிர்ஷ்டத்தை தரும் என்பார்கள்.

நீங்கள் தங்க மோதிரம் அணிந்து இருப்பதை விட ஒரே ஒரு வெள்ளி மோதிரத்தை எப்போதும் கலாட்டாமல் அணிந்து கொண்டு இருங்கள். இதனால் உங்களுடைய கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இது பெண்களுக்கு நிச்சயமாக நடக்கக்கூடிய சூட்சம விஷயங்களில் ஒன்றாகும். அது போல் நீங்கள் அஞ்சரை பெட்டியில் நீங்கள் ஐந்து ரூபாய் நாணயங்களை சேர்த்து வைத்து கொண்டே வாருங்கள். நல்ல ஒரு பணவரவு உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *