கணவருக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்…. உலகத்துல இப்படியொரு ஐடியா யாருக்கும் இருக்காது !!

வைரல்

உலகத்துல இப்படியொரு ஐடியா ….

தான் கருவுற்றிருப்பதை கணவரிடம் பெண் ஒருவர் சொன்ன விதம் பல மில்லியன் மக்களைக் கவர்ந்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள அரிஸோனாவை சேர்ந்தவர் Hayli Baez. இவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலம். இந்நிலையில் சமீபத்தில் கருவுற்றிருப்பதை அறிந்து கொள்ளும் கிட் மூலம் சோதனை செய்த அவர், தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

இந்த சந்தோஷமான விஷயத்தை தனது கணவரிடம் சொல்ல நினைத்த அவர், சாதாரணமாகச் சொல்லாமல் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில், அந்த மகிழ்ச்சியான செய்தியை வெளிப்படுத்த நினைத்துள்ளார். அதற்காக அவர் நினைத்த திட்டத்தையும், அவர் அதைச் சொன்ன விதத்தையும், அதற்கு அவரது கணவரின் ரியாக்ஷன் என்ன என்பதையும் வீடியோவாக படம் பிடித்து யூடியூப் மற்றும் டிக் டாக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அது இணையத்தில் வைரல் ஹிட் ஆகியுள்ளது. அந்த வகையில் சுமார் 6.05 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், தான் கருவுற்ற செய்தியைச் சுரண்டல் லாட்டரி ஒன்றில் எழுதி அந்த லாட்டரி சீட்டை தன் கணவனிடம் கொடுத்து, அதில் என்ன பரிசு விழுந்துள்ளது என்பதைப் பார்க்கச் சொல்கிறார். அதன்படியே அவரது கணவரும் அந்த லாட்டரி சீட்டை தேய்க்கிறார். அப்போது அந்த லாட்டரி சீட்டில் ‘BABY’ என எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து குழம்பி நிற்கிறார்.

அப்போது அவரது மனைவியின் முகத்தில் தெரிந்த மட்டற்ற மகிழ்ச்சியைப் பார்த்து உணர்ந்து கொண்ட Hayliயின் கணவர், குஷியில் ஆனந்த கூக்குரல் எழுப்பி தனது மனைவியைக் கட்டி தூ க் கு கிறார். இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து Hayli வெளியிட்டுள்ள நிலையில், அது தற்போது ஹிட் அ டி த் து ள்ளது. இந்த வீடியோவை யூடியூபில் சுமார் எழுபதாயிரம் பேரும், டிக் டாக்கில் மூன்று பில்லியன் பேரும் பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *