தினந்தோறும் வளரும் நந்தி- உலகமே வி யந்து பார்க்கும் அ தி சயம் !!

ஆன்மீகம்

தினந்தோறும் வளரும் நந்தி……..

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில் அமையப்பெற்றுள்ளது, வைணவ மரபுகளின் படி கட்டப்பட்டுள்ள இந்த கோவிலின் நந்தி சிலை நாள்தோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது, இதை தொல்பொருள் ஆய்வுத்துறையும் கூட உறுதிசெய்துள்ளதாம். 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டதாம்.

மலைகள் சூழ அழகிய இயற்கை காட்சிகளால் சூழப்பட்ட இந்த கோவிலில் அழகிய புஷ்கர்னி அமைந்துள்ளது. இங்கு தொடர்ந்து தண்ணீர் பாய்வது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த புஷ்கர்னியில் ஆண்டு முழுவதும் எப்போதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு இந்த புனித நீரில் குளிப்பது வழக்கமாக உள்ளது. இந்த புஷ்கரணியில் குளிப்பதால் அனைத்து பாவங்களையும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

கர்னூல் ஸ்ரீ யங்கதி உமா மகேஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு எதிரில் உள்ள இந்த நந்தி சிலையின் அளவு தினமும் அதிகரித்து வருவதால், அதை சுற்றி உள்ள சில தூண்கள் அகற்றப்பட்டுள்ளன. நந்தியின் வளர்ச்சி காரணமாக வருங்காலத்தில் இன்னும் பல தூண்களை அகற்ற வேண்டி இருக்கும் எனப்படுகிறது. கோவிலில் உள்ள சிவன் சன்னதிக்கு முன் இருக்கும் பிரமாண்ட நந்தி சிலை முன்பு சிறியதாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த நந்தி சிலை ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குள் நந்தியின் அளவு ஒரு அங்குலம் வளர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நந்தி சிலை செய்யப்பட்ட கல் விரிவடையும் தன்மை கொண்டது என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த நந்தி சிலை முன் வைக்கப்பட்டுள்ள குறிப்பு பலகையில்,

முன்பெல்லாம் இந்த நந்தியை வலம் வரக்கூடிய அளவு இடம் இருந்ததாகவும், தற்போது சிலையின் அளவு பெரிதானதால் வலம் வர இடம் இல்லாமல் போய் விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற சிவன் கோவில்களில் இருப்பது போன்று சிவ லிங்கம் இல்லாமல், சிவனும் – பார்வதியும் சேர்ந்த அர்த்தநரிஸ்வர வடிவத்தில் அமர்ந்து நிலையில் காட்சி தருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒரே கல்லினால் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த வகையான முதல் கோவில் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *