வீட்டில் குபேர திசையில் இந்த 5 பொருட்களையும் தப்பித் தவறியும் கூட வைக்க வேண்டாம்! மோசமான பலன் உண்டாகும் !!

ஆன்மீகம்

மோசமான பலன் உண்டாகும் குபேர திசை ……….

வாஸ்து சாஸ்திரம் என்பது பெரிய வீடு கட்டும் போது தான் பின்பற்ற முடியும் என்பது இல்லை. நாம் எவ்வளவு சிறிய வீட்டில் குடியிருந்தாலும் அதில் எந்தளவுக்கு நாம் வாஸ்து பின்பற்றியுள்ளோம் என்பதோடு சில நேர்மறை ஆற்றலை இழுக்கும் மற்றும் தெய்வங்களின் அருள் கிடைக்கும் திசைகளில் சில வீட்டு உபயோக பொருட்களை வைக்காமல் இருப்பதும், லட்சுமி கடாட்சம் தரும் சில பொருட்களை வைப்பதால் இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

காலணிகள்
வீட்டின் வடக்கு பகுதி குபேர திசை என்பார்கள். நீங்கள் எப்போதெல்லாம் வெளியில் சென்று வருகிறீர்களோ அப்போதெல்லாம் மறந்தும் வீட்டின் வட திசையில் காலணிகள் வைத்தல் கூடாது. அதுமட்டுமல்லாமல் வடக்கு திசை நோக்கியும் காலணிகளைக் கழற்றி வைத்தல் கூடாது. இது இறைவனை அவமதிப்பது போன்றதாகும். எனவே அந்த இடத்தில் காலணிகளை மறந்து கழற்றி வைக்காதீர்கள்.

​குளியலறை
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் வடக்கு திசையில் மிகப்பெரிய குறைபாடாகப் பார்க்கப்படுவது, இந்த திசையில் கழிப்பறை அல்லது குளியலறை அமைப்பதாகும். இந்த திசையில் வீட்டின் கழிப்பறை, குளியலறை அமைப்பதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்காமல் போகும். வீட்டில் வடக்கு திசையில் குளியலறை அல்லது கழிப்பறை அமைத்து விட்டோமே என்ன செய்வது என கலங்குபவர்கள் ஒரு பரிகாரத்தைச் செய்யலாம்.

அதாவது ஒரு கண்ணாடி கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி குளியலறையின் ஏதேனும் ஒரு மூலையில் வைக்கவும். இந்த உப்பை ஒவ்வொரு வாரமும் மாற்றிக் கொண்டே இருங்கள். இதைச் செய்வதன் மூலம் அப்பகுதியின் எதிர்வினை நீங்கி நிவாரணம் கிடைக்கும். இந்த உப்பை சமைக்க பயன்படுத்த வேண்டாம்.

​கனமான பொருட்கள் வைக்க வேண்டாம்
வீட்டின் வடக்கு திசையில் நேர்மறை ஆற்றல் அதிகம் கிடைக்கக்கூடிய பகுதி. என இந்த பகுதியில் கனமான பொருட்கள். வடக்கு திசையை முழுவதும் மறைக்கும் வண்ணம் பெரிய பொருட்களை வைக்க வேண்டாம்.

பெரிய பொருட்கள், கனமான பொருட்களை வைப்பதால் இந்த திசையிலிருந்து நேர்மறை ஆற்றலை பெறுவதை தடுக்கிறது என்று நம்பப்படுகிறது. முடிந்தவரை இந்த திசையை காலியாக வைத்துக் கொள்வது நல்லது. இந்த திசையில், அழுக்கு நீர் அல்லது குப்பைகளை தவறுதலாக கூட குவிக்கக்கூடாது.

​பழைய உடைந்த பொருள்கள் இங்கு வைக்காதீர்கள்
வீட்டில் வடக்கு திசையை சுத்தமாகவும் அழகாகவும் வைக்க வேண்டும். குழந்தைகள் வடக்கு திசை நோக்கி அமர்ந்து படிக்கும் வகையில் அவர்களின் படிப்புக்கான மேஜையை அமைக்க வேண்டும்.

​குப்பைத் தொட்டி
இந்த திசையில் குப்பைத் தொட்டி மறந்தும் வைக்க வேண்டாம். இந்த திசையில் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த திசையில் குப்பை குவிந்து விடக்கூடாது, தினமும் தண்ணீரில் உப்பு சேர்த்து துடைக்கவும். இதைச் செய்வதன் மூலம், வீட்டில் அனைத்து வகையான எதிர்மறை ஆற்றலும் அகற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *