விரதமிருந்து தேங்காயில் தீபம் ஏற்றுங்கள்! என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா !!

ஆன்மீகம்

தேங்காயில் தீபம் ஏற்றுங்கள்……..

பயபக்தியுடன் விரதம் இருந்து தேங்காய் தீபம் ஏற்றுவதால் பல நன்மைகள் உண்டு. பொதுவாக தேங்காய் தீபத்தை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்ற மாட்டார்கள், ஒரு சில பிரச்சனைகளை போக்கவே தேங்காய் தீபம் ஏற்றப்படுகிறது. அது ஏன்? ஏற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.

எதற்காக ஏற்றப்படுகிறது? பண ரீதியான வில்லங்கமான விஷயங்களில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் விரதம் இருந்து வீட்டின் பூஜை அறையில் சுக்கிர ஹோரையில் திங்கள் கிழமையில் தேங்காய் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள். வேலை இல்லாதவர்கள் வேலை கிடைக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், அம்மன் போன்ற பெண் தெய்வங்களுக்கு விரதம் இருந்து இரண்டு தேங்காய்களை உடைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

எப்படி ஏற்ற வேண்டும்?
தேங்காய் தீபம் ஏற்றும் பொழுது தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் நெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்துவது கிடையாது.

கிடைக்கும் நன்மைகள்
விரதம் இருந்து தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கவும், தொழில் வளம் சிறக்கவும், நல்ல வரன் அமையவும், வேண்டுதல்கள் விரைவாகவும் பலிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *