பணவரவும் நன்மையும் அதிகரிக்க போகும் இன்றைய ராசிக்காரர்கள் யார் யாரென்று தெரியுமா !! அந்த லிஸ்ட்இல் இருக்கும் ராசியினர் !!

ஆன்மீகம்

இன்றைய ராசிக்கான பணவரவு யாருக்கு ……

மேஷம் – பேச்சு,செயலில் புத்துணர்வு வெளிப்படும். தொழிலில் நிர்ணயித்த இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். லாபம் உயரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். பிள்ளைகள் உதவிகரமாக நடந்து கொள்வர்.

ரிஷபம் – புதிய விஷயங்களை ஆர்வமுடன் அறிந்து கொள்வீர்கள். வாகன அனுபவம் இனியதாக அமையும். தொழில்,வியாபாரத்தில் முன்னேற்றம் பெற நவீன மாற்றம் செய்வீர்கள். லாபம் சீராக இருக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

மிதுனம் – நண்பர்களின் உதவி மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் உபரி பணவருமானம் கிடைக்கும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

கடகம் – முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். தவிர்க்க இயலாத வகையில் தி டீர் செலவு ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம் – எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். எளிமையானவருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி பெறுவர்.

கன்னி – வழக்கத்திற்கு மாறான தி டீர் பணியால் சிரமப்படலாம். தொழில் வியாபாரம் சீராக நண்பரின் உதவி கிடைக்கும். வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம் – மனதில் தெய்வீக சிந்தனை வளரும். உறவினர்களுக்கு தகுந்த உதவி செய்வீர்கள். தொழில், வியாபாரம் சிறந்து வாழ்க்கைத் தரம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும் .குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.

விருச்சகம் – உங்கள் தேவையை நிறைவேற்றுவதில அக்கறை கொள்வீர்கள். மற்றவரின் அதிருப்தி வராதபடி செயல்படவும். தொழிலில் இலக்கு நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். புத்திரரின் திறமைமிகு செயல் மனதை மகிழ்விக்கும்.

தனுசு – சிலர் சுயலாபத்திற்காக உங்களுக்கு உதவ முன்வருவர். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பணம், நகையை விழிப்புடன் கையாளவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

மகரம் – எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படவும். தொழிலில் கூடுதல் உழைப்பால் உற்பத்தி விற்பனை சீராகும். உடல்நிலை சீர்பெறும். பெண்கள் பணம், நகை ஆகியவற்றை கவனமுடன் பாதுகாக்கவும். நண்பர் சந்திப்பால் நன்மை காண்பீர்கள்.

கும்பம் – பேச்சில் இனிமை காண்பீர்கள். நல்லவர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். சேமிக்கும் விதத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

மீனம் – நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *