வெள்ளிக் கிழமையில் இப்படி விளக்கு ஏற்றினால் …. பெண்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல அதிர்ஷ்ட வரன் மற்றும் வீட்டில் செல்வம் அதிகரிக்குமாம் !!

ஆன்மீகம்

பெண்களுக்கு மனதிற்கு பிடித்த ……..

செல்வம் கொழிக்க வீட்டில் செய்ய வேண்டிய சில வழிபாடு முறைகளை பின்பற்றி வந்தால் வீடு சுபீட்சமாக இருக்கும். மாபெரும் திருவிழா எனப்படும் திருமண பந்தத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் கன்னிப் பெண்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல அதிர்ஷ்டமான வரன் அமைய, இந்த பரிகாரம் செய்து வந்தால் தடை நீங்கி, நல்ல வாழ்வு அமையும்.

மகாலட்சுமி வழிபாடு
கன்னிப் பெண்களுக்கு திருமணம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் அதாவது எவ்வளவு வரன்கள் பார்த்தாலும் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே தள்ளிப் போகும். நல்ல வரன் கூடி வந்தாலும் அவர்களுக்குள் ஜாதகப் பொருத்தம் இருப்பதில்லை. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட திடீரென நின்று போவதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறானவர்கள் வீட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு இந்த வழிபாடு செய்யலாம்.

தாமரையில் லக்ஷ்மி
மகாலட்சுமி தாமரை புஷ்பத்தில் தான் வீற்றிருக்கிறாள். ஏனெனில் தாமரையில் லக்ஷ்மி தேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அதே நேரம் ஐந்து முக குத்து விளக்கில் அதிர்ஷ்ட லட்சுமி வாசம் செய்கிறாள். வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் தாமரை கோலம் இட்டு வைக்க வேண்டும்.
அந்த தாமரை கோலத்தை பூஜையறையில் இட்டுவிட்டு, அதன் மேல் ஒரு ஐந்து முக குத்து விளக்கை வைக்க வேண்டும். குத்து விளக்கை வழிபடுபவர்களுக்கு குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

குத்துவிளக்கு அலங்காரம்

குத்துவிளக்கிற்கு சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி வைக்க வேண்டும். அதில் தாமரைத் தண்டு திரி அல்லது பஞ்சு திரி வைத்து தீபமேற்றி, மகாலட்சுமி உடைய 108 போற்றிகளை உச்சரிக்க வேண்டும். குத்துவிளக்கிற்கு பொட்டு வைக்கும் பொழுது ‘மகாலட்சுமி போற்றி ஓம்’ என்று சொல்லிக் கொண்டே வைக்க வேண்டும். குத்துவிளக்கை வாசனை மிகுந்த மலரால் அலங்காரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் குத்துவிளக்கை நன்கு பளபளப்பாக சுத்தம் செய்து பூஜையில் வையுங்கள்.அதற்கு முறையாக மஞ்சள், குங்குமம் அல்லது சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளலாம்.

வில்வ இலை அர்ச்சனை
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக மகாலட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
மகாலட்சுமி தாயை நினைத்து நல்ல வரன் அமைய, பூஜை செய்வது நல்ல பலன்களையும் கொடுக்கும்.இந்த பூஜையை திருமணம் நிச்சயிக்க இருக்கும் மணப்பெண் செய்வது தான் முறையாகும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வந்தால் நிச்சயம் மனதிற்கு பிடித்த வரன், கன்னிப் பெண்களுக்கு அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *