யாருடைய வீடுகளில் எல்லாம் தையல் மெஷின் உள்ளது !! வீடுகளில் வரப்போகும் கஷ்டங்களை தடுக்க, இதை நீங்கள் தெரிஞ்சுக்கிட்டேதா ஆகணும் !!

ஆன்மீகம்

வீடுகளில் வரப்போகும் கஷ்டங்களை தடுக்க …..

தையல்மிஷினை ஒரு வீட்டில் வைத்துக் கொள்லாமா? வைத்துக் கொள்ளக்கூடாதா? வாஸ்து ரீதியாக எந்தெந்த பொருட்களை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று, இந்த காலகட்டத்தில் பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருந்து தான் வருகின்றது. கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு இந்த தையல் மெஷின் ஒரு காரணமாக இருக்கிறதா?

பல வீடுகளில் தையல் தொழிலை செய்து தான் தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்கள். நம்மில் நிறைய பேர் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களில், இந்த தையல் மெஷினும் அடங்கும். அந்த வரிசையில் இந்த அப்படியே வீட்டில் இருந்தால், அது எந்த திசையில் இருக்க வேண்டும். இந்த தையல் மெஷினினால் வீட்டில் பிரச்சனை வராமல் இருப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? இப்படிப்பட்ட பலவிதமான கேள்விகளை பார்க்க போகின்றோம்.

நம் மானத்தை காப்பதில் இந்தத் தையல் மிஷனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. நாம் அணியும் ஆடையை தைத்து தரக்கூடிய ஒரு பொருள் தையல் மெஷின். வீட்டில் இருக்கும் பெண்கள் தையல் கலையை கற்றுக் கொண்டு, தங்களால் முடிந்த வருமானத்தை தன்னுடைய குடும்பத்திற்காக சம்பாதித்துக் கொடுக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு ஆடை என்பது எவ்வளவு முக்கியம். அந்த ஆடையை தைக்கும் தையல் மெஷின் அப்போது முக்கியம் தானே.

தையல் மெஷின் ராகுவின் அம்சம்.
தையல்மிஷினை படுக்கை அறையில் வைப்பதன் மூலமாகத்தான் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருகிறது என்ற குழப்பம் உங்கள் மனதிற்குள் இருந்தால், அதை படுக்கை அறையில் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய வீட்டில் வேறு ஏதேனும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தையல் மெஷின் மிகவும் கனமானது. இரும்பினால் செய்யப்பட்டது. அதுவும் அல்லாமல் அதில் கூர்மையான ஊசி உள்ளது என்பதால், அதை படுக்கையறையில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்கள்.

எந்த திசையில் வைக்கலாம்
வீட்டில் தையல் மிஷினை வைத்து தைப்பவர்கள், அந்த தையல்மிஷினை எந்த திசையில் வைக்கலாம் என்றால், தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் வைத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். ஏனென்றால் இந்த இடத்தில் அதிக எடைகொண்ட பொருட்கள், குறிப்பாக இரும்பு பொருட்களை நாம் வைக்கலாம். நம் வீட்டு பீரோ பெரும்பாலும் அந்த திசையில் தான் இருக்கும் அல்லவா? கடைகளில் நீங்கள் தையல் மிஷினை வைத்து வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், அந்தக் கடைக்கு, வாஸ்து பார்த்து இந்த திசையில் தான் தையல்மிஷினை வைக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. தொழில் செய்யும் இடத்தில், இட வசதிக்கேற்ப உங்களது தையல் மெஷினை வாங்கிப் போ ட் டு, உங்களுக்கு எது சவுகரியம் ஆக இருக்கிறதோ அதன்படி அந்த திசையில் வைத்துக் கொள்வதில் தவறு எதுவுமே கிடையாது என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு வாழ்வாதாரத்தை தரும், உங்களுக்கு வருமானத்தைத் தரும் தையல் மெஷினின் மூலமாகத்தான் உங்களுடைய வீட்டில் பிரச்சினை வருகிறது என்ற எண்ணத்தை முதலில் நீங்கள் தவிர்த்துவிட வேண்டும். பிரச்சனைகள் வருவதற்கு எப்போதுமே இயந்திரங்கள் காரணமாக இருப்பதில்லை. நம்முடைய மனதுதான் காரணம். உங்களுடைய வீட்டில் தையல்மிஷினை தாராளமாக வைத்துக் கொள்ளலாம். தையல் மெஷின் இல்லாத வீட்டில் கணவன் மனைவிக்குள் குடும்ப பிரச்சனை வருவதில்லையா? ஏதாவது ஒரு விஷயத்தில் அது வந்து கொண்டுதான் இருக்கும். அது இயல்பு.

சரிங்க! எவ்வளவு தான் சொல்லியும் உங்களது மனது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கஷ்டம் வர தையல் மெஷின் தான் காரணம் என்ற எண்ணம் உங்கள் மனதில் பதிந்து விட்டது. வீட்டில் வைத்து தையல் தொழில் செய்பவர்கள், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அந்த கடைக்கு அட்வான்ஸ் கொடுத்து, மாதாமாதம் அந்த கடைக்கு தனியாக வாடகை செலுத்தி தொழிலை நடத்த முடியுமா? தையல் மெஷினால் தான் பிரச்சினை வருகிறது என்று அந்த மெஷினை தூ க் கி வெளியே வைத்துவிட்டு நம் வாழ்வாதாரத்தை இழக்க முடியுமா? தொழிலை விட்டால் தான் பிரச்சனை தொடங்கும்.

உங்களுடைய மனதை சமாதானப்படுத்த உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் இருக்க, ஆன்மீக ரீதியாக ஒரு தீர்வும் உள்ளது. உங்களுடைய தையல் மிஷின் இருக்கும் இடத்தில், நீங்கள் துணிகளை தைக்கும் அந்த இடத்தில் சுவற்றில், ஒரு ஆணியை அடித்து அதில் அரச மரத்தடியில் பிள்ளையார் இருப்பது போல ஒரு பிள்ளையாரை மாட்டி விடுங்கள்.

அவ்வளவு தான். வேறு எதுவுமே தேவையில்லை. அந்த தையல்மிஷினால் உங்களுக்கு ஏதாவது ஒரு தோஷம் வரும் என்றாலும், அந்த தோஷத்தை தடுத்து நிறுத்தும் சக்தி அந்த விநாயகருக்கு உண்டு. அந்த மெஷினில் அமர்ந்து உங்களது தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த விநாயகருக்கு ஒரு சிறிய நமஸ்காரத்தைப் வைத்துவிட்டு, அதன் பின்பு உங்கள் தொழிலை தொடங்குங்கள். உங்கள் தொழிலும் நன்றாக செல்லும். தோஷங்களும், கெட்டதும் உங்களைவிட்டு விலகிப் போய்விடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *